Thangalaan Movie Review : தங்கலான் திரைப்படத்தின் திரை விமர்சனம்

நடிகர் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் குறித்த ரசிகர்களின் விமர்சனங்களை (Thangalaan Movie Review) தற்போது காணலாம்.

தங்கலான் :

விக்ரம் ஐ படத்துக்குப் பிறகு தன்னுடைய உடலை அதிகம் வருத்திக்கொண்டு, பல்வேறு சவால்கள், காயங்கள், ரத்தம் போன்றவற்றைத் தாங்கிக் கொண்டு நடித்து முடித்திருக்கும் படம் ‘தங்கலான்’. இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். அட்டகத்தி மூலம் தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் கார்த்தியை வைத்து மெட்ராஸ், ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி போன்ற படங்களை இயக்கினார். தங்கம் எடுப்பதற்காக ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்களைப் பற்றி இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

இந்த படத்தில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிகை பார்வதி திருவோத்து நடித்துள்ளார். படங்களில் கிளாமரை காட்டுவதை தவிர்த்து வரும் பார்வதி, இந்த படத்திற்காக பல காட்சிகளில் ஜாக்கெட் இல்லாமல் நடித்துள்ளார். அதேபோல சூனியக்காரி அவந்திகாவாக நடிகை மாளவிகா மோகனன் தனித்துவம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே. இந்தப் படத்தின் ஒளிப்பதிவை அவரே கவனித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சுமார் 100 முதல் 150 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்ததா? என ரசிகர்கள் கூறிய விமர்சனங்களை (Thangalaan Movie Review) தற்போது பார்க்கலாம்.

தங்கலான் மையக்கருத்து :

ஒதுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டமாக வாழ்கின்றனர். ஒரு பண்ணையாரின் கீழ் பணிபுரியும் இவர்களை ஒரு ஆங்கிலேயர் தனது வேலைக்கு பயன்படுத்த விரும்புகிறார். அதாவது, தங்களுடைய இடத்தில் தங்கம் இருப்பதை அறிந்ததும், ஆசை வார்த்தைகளைக் காட்டி மக்களைத் தன் பக்கம் இழுக்கிறான். அடிமை வாழ்க்கை வாழ்வதை விட சுகபோகமாக வாழுங்கள் என்று சொல்லும் வார்த்தையை நம்பி விக்ரமும் அவனது ஆட்களும் தங்கம் தேட செல்கிறார்கள். முயற்சி வெற்றி பெற்றதா? மக்களுக்கு என்ன ஆனது? விக்ரமின் போராட்டம் என்ன? என்பதே படத்தின் கதையாகும்.

Thangalaan Movie Review :

தங்கலானின் முதல் பாதி புல்லரிக்க செய்கிறது, சீயான் விக்ரம் நடிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தின் முதுகெலும்பாக ஜி.வி.பிரகாஷ் செயல்பட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியும் அருமை. தரமான படத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அதேபோல் நடிகர் விக்ரமும் தனது முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். விக்ரமின் நடிப்பில் நாம் வியக்காத படங்களே இல்லை. ஆனால் இந்த தங்கலானில் காட்சிக்கு காட்சியை மிரட்டி கதி கலங்க வைத்திருக்கிறார். படம் பார்த்தவர்கள் இன்னும் அந்த தாக்கத்தில் இருந்து மீளவில்லை. மேலும் படத்துக்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பு பிரமிக்க வைக்கிறது.

அதேபோல் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரங்களும் நடிப்பும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. அந்த வகையில் கதாப்பாத்திர தேர்வை கச்சிதமாக கையாண்டுள்ளார் ரஞ்சித். படத்தில் இவ்வளவு இருந்தாலும் ரஞ்சித் இந்தக் கதையை எப்படி எடுத்துச் சென்றிருக்கிறார் என்று பார்வையாளர்கள் குழம்புகிறார்கள். அதேபோல் படம் முடிந்த பிறகும் சில கேள்விகள் மூளையை உறுத்திக்கொண்டே இருக்கும். அதற்கு இயக்குநர் தெளிவான விளக்கம் தரவில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி தமிழர்களின் சொல்லப்படாத வலியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ரஞ்சித். அதற்கு உயிர் கொடுத்த விக்ரம் இதன் மூலம் பல விருதுகளை வெல்வார் என்பதில் சந்தேகமில்லை. ஆக மொத்தத்தில் தங்கலான் – ஒரு விஷுவல் ட்ரீட். 

Latest Slideshows

Leave a Reply