Thangalaan Movie Teaser : தங்கலான் படத்தின் டீசர் வெளியீடு
Thangalaan Movie Teaser :
விக்ரம், ஒரு கலைஞனாக தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மெனக்கெடுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது பாராட்டத்தக்கது என்று தங்கலான் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.
‘இரத்தம் ஓடும் ஆறு’ ரத்தத்தில் குளித்த விக்ரம் என மிரட்டலாக தங்கலான் படத்தின் டீசர் (Thangalaan Movie Teaser) வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் (Thangalaan Movie Teaser) வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரொடக்ஷன் சார்பில் பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் தங்கலான். இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி வரும் தங்கலான் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தங்கலான் டீசர் வெளியீட்டு விழா :
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் டீசர் (Thangalaan Movie Teaser) வெளியாகியுள்ளது. டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய பா.இரஞ்சித், நாங்கள் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால் ஒரு கலைஞனாக நாம் கொடுக்கும் அர்ப்பணிப்பு முக்கியமானது. படப்பிடிப்பில் விக்ரம் அவர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பார்த்தேன். பொதுவாக ஒரு கதாபாத்திரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஓவியங்கள் மற்றும் போட்டோஷூட் மூலம் முடிவு செய்வோம். ஆனால் விக்ரம் எனக்கு நிறைய ஆப்ஷன் கொடுத்தார். இத்தனை வருடங்கள் திரையுலகில் இருந்தும், ஒரு கேரக்டரில் அவர் நடிக்கும் திறமை வியக்க வைக்கிறது. விலா எலும்பு முறிவுக்குப் பிறகும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
சூட்டிங், சினிமா என்று வரும்போது நான் மிகவும் சுயநலமானவன். என் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கவும், அதை நிஜத்துக்கு கொண்டு வரவும் பல டேக்குகளை எடுக்கவும் தயங்க மாட்டேன். ஒரு நாள் அவர் குணமடைந்து மீண்டும் சூட்டிங் வர தொடங்கிய பிறகு, ஒருநாள் மாலை 4 மணி வரை நீடித்தது. அப்போதும் அவர் ஈடுபாட்டுடன் இருந்தார். உண்மையில், விக்ரம் அவர்களின் ஒத்துழைப்பு அவர் கதாபாத்திரத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. அவருடைய ஈடுபாடு எனக்கு நம்பிக்கையைத் தந்தது. தங்கலான் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என பேசியிருக்கிறார். மேலும் பார்வதி நன்றாக நடித்துள்ளார். இதில் மாளவி தொடங்கி அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கியுள்ளனர். எல்லோருடைய உழைப்பையும் படத்தில் பார்க்கலாம். அனைத்து நடிகர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். விக்ரம் வேலை பார்க்கவே பயமாக இருந்தது. நடிகர்கள் மிகவும் கடினமாக நடிக்கிறார்கள். என்று பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசியதாவது, ‘வரலாற்றில் நடக்கும் நல்லவை கொண்டாடப்பட வேண்டும். கெட்ட விஷயங்களை மறக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ரஞ்சித் கதையை மிக அருமையாக விவரித்தார். நாம் சிலவற்றை மறந்து விடுகிறோம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சமூகத்தின் வாழ்க்கையைப் பேசும் இந்தப் படம் அழவைத்து சோகத்தைப் பிழியாமல், யதார்த்தமாகப் பேசும் படைப்பாக இருக்கும்.
கேஜிஎஃப் பகுதியில் தங்கி படப்பிடிப்பை நடத்தினோம். காலையில் அதிக வெப்பமாகவும், இரவில் குளிர்ச்சியாகவும் இருக்கும். இந்த சூழலில் வெறும் கோவணத்தை கட்டிக்கொண்டு நடிக்க வேண்டியதாயிற்று. என்னுடைய உடை முதல் தோற்றம் வரை அனைத்தும் அவர்களின் வாழ்க்கை முறை தான். மேக்கப் போடுவதற்கு மட்டும் சுமார் 4 முதல் 5 மணி நேரம் ஆகும். எங்கு பார்த்தாலும் பாம்பு, தேள்கள் உலாவும் இடமாக இருந்தது. அப்படிப்பட்ட இடத்தில் செருப்பில்லாமல் பார்த்து பார்த்து நடந்தோம். அப்போதுதான் அந்த இடத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை உணர்ந்தோம். படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரமாகவே மாறிவிட்டோம். ரஞ்சித்தின் ஒவ்வொரு பிரேமும் அழகாக இருக்கும். ஒரு சிறந்த இயக்குனர், அவர் இயக்கிய தங்கலான் உங்கள் எதிர்பார்ப்பை விட வித்தியாசமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
Latest Slideshows
-
Apple iPhone 16 Series : ஆப்பிள் நிறுவனம் iPhone 16 Series ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்கிறது
-
Benefits Of Arugampul Juice : அருகம்புல் ஜூஸ் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்
-
RERA Full Form : RERA பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை
-
Praveen Kumar Won The Gold Medal : இந்திய வீரர் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்
-
Yagi Cyclone : சீனாவை புரட்டி போட்ட 'யாகி' சூறாவளி
-
Manavar Manasu Book : தேனி சுந்தர் எழுதிய மாணவர் மனசு
-
Intel அதன் Intel Core Ultra 200V AI Laptop Chips அறிமுகப்படுத்தியது
-
SSC Recruitment 2024 : 39,481 காலிப்பணியிடங்கள் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
Interesting Facts About Camel : ஒட்டகங்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
-
GOAT Box Office Day 1 : கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல்