Thangalaan Movie Update : பா.ரஞ்சித் வெளியிட்ட தரமான அப்டேட்

Thangalaan Movie Update :

தங்கலான் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் (Thangalaan Movie Update) என்ற தகவலை பா.இரஞ்சித் அதிரடியாக வெளியிட்டுள்ளார். இயக்குனர் பா.இரஞ்சித் கடைசியாக “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை கடைசியாக இயக்கினார். ஆனால் அந்த படம் பா.ரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார் போல என பா.ரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் நடித்த ரெனே கதாபாத்திரம் விமர்சனங்களை தாண்டி கடும் ட்ரோல்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தங்கலான் படத்தில் கமிட்டானார் ரஞ்சித். தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் தயாரிக்கிறார். பல வருடங்களாக பெரிய வெற்றிக்காக போராடி வரும் விக்ரமுக்கு இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் சீயான் ரசிகர்கள் நம்புகின்றனர்.

விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் விக்ரம் உயிர் கொடுத்து நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் தனது வெற்றிக்கான ஏக்கம் கண்டிப்பாக தீரும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இந்தப் படம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் என்றும் கணித்துள்ளனர். தங்கலான் படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கல் பகுதியில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் நடந்தது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு மேல் மதுரையில் நடந்தது. அதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் (Thangalaan Movie Update) அறிவிக்கப்படும்.

தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்ரம் விரைவில் டப்பிங்கை முடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தங்கலான் படத்தின் இயக்குனர் பா.இரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்த போது தங்கலான் படத்தின் அப்டேட் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தங்கலான் படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும்” (Thangalaan Movie Update) என்றார். இது விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply