Thangalaan Trailer Release Date : தங்கலான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படம் விக்ரம் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் படம் நேரடி சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் (Thangalaan Trailer Release Date) என படக்குழு தெரிவித்துள்ளது.

தங்கலான் :

தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானதில் இருந்து அம்பேத்கர், பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் போன்றோரின் கருத்துக்கள், காட்சிகள், குறியீடுகள், உரையாடல்கள் மூலம் தொடர்ந்து தனது படங்களில் வெளிப்படுத்தி வருகிறார் இயக்குநர் பா.ரஞ்சித். குறிப்பாக, அம்பேத்கரின் கருத்துகளையும், சிந்தனைகளையும் தனது படங்களில் குறியீடாகவும், நேரடிக் காட்சிகளாகவும், உரையாடல்களாகவும் பல படங்களில் காட்சிப்படுத்தியவர் ரஞ்சித். இதனால் தான் தமிழ் சினிமா ரசிகர் மன்றத்தில் ரஞ்சித்துக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக முற்போக்கு சிந்தனையாளர்கள் ரஞ்சித் படத்தை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். கோலார் தங்கவயலை மையப்படுத்திய இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருந்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பருக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி நேற்று அதாவது ஜூலை 8 ஆம் தேதி வெளியானது.

Thangalaan Trailer Release Date :

இந்நிலையில் தங்கலான் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை அதாவது ஜூலை 10 ஆம் தேதி (Thangalaan Trailer Release Date) வெளியாக உள்ளது. 

Latest Slideshows

Leave a Reply