Thanjavur Mini Tidel Park : தஞ்சாவூரில் ரூ.27.13 கோடியில் நான்கு தளத்துடன் Mini Tidel Park

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த அந்தந்த பகுதியிலே வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மினி டைடல் பூங்காக்களை (Mini Tidel Parks) தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது. தஞ்சாவூரில் கட்டப்பட்டு வந்த Tidel Park-ன் (Thanjavur Mini Tidel Park) பணிகள் 95% நிறைவு பெற்ற நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் இதைத் திறந்து வைக்க உள்ளார்.

தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள மாவட்டங்களிலும் Tidel Park திட்டம் விரிவாக்கம் :

தமிழகம் ஆனது தகவல் தொழில்நுட்ப துறையில் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் Tidel NEO நிறுவனத்துடன் இணைந்து இந்த Tidel Park திட்டம் செயல்படுத்தப்பட்டது. சென்னை தரமணி ராஜீவ் காந்தி சாலையில் 2000ம் ஆண்டில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது Tidel Park திறக்கப்பட்டது. IT துறையில் தமிழகம் ஆனது நல்ல வளர்ச்சி அடைகின்ற வகையில் Tidel park நிறுவனம் ஆனது கொண்டு வரப்பட்டது. சென்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்ட Tidel Park திட்டம், அதன் பின்னர் தமிழகத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.

இந்த விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம், மேலவஸ்தாசாவடி ரவுண்டானா அருகே டைடல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் 2023 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளன. தஞ்சாவூரில் Tidel Park திட்டம் 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.27.13 கோடியில் நான்கு தளங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இதைப்போலவே தமிழகத்தின் கோவை, திருச்சி மற்றும் மதுரையிலும் பிரமாண்ட ஐடி பூங்காங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை Tidel Park நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து Tidel Neo என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைத்து வருகின்றது.

Thanjavur Mini Tidel Park - தஞ்சாவூர் டெல்டா பகுதியினர் எளிதாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் :

தற்போது IT படிக்கும் தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தஞ்சாவூரில் Tidel Park விரைவில் திறக்கப்பட உள்ளதால் (Thanjavur Mini Tidel Park) இந்த நிலை ஆனது இனிவரும் காலங்களில் மாற உள்ளது. இதன்மூலம் திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த IT படிக்கும் இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஆனது கிடைக்கும் (சுமார் 1,000 இளைஞர்களுக்கு).

இந்த டைடல் பார்க்கில் ஏற்கனவே இரண்டு நிறுவனங்கள் செயல்பட முன்பதிவு செய்துவிட்ட நிலையில் இன்னும் ஏழு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கூடுதல் நிறுவனங்கள் செயல்பட முன்வந்தால் அருகிலுள்ள இடத்தில் கூடுதல் கட்டிடம் ஆனது கட்டப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தஞ்சாவூர் டெல்டா பகுதியினர் எளிதாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்பதால் தமிழக அரசு அமைக்கும் Tidel Park-ற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இதன் மூலம் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply