The 3rd Full Fledged Railway Station At Tambaram : 3வது முக்கிய ரயில் நிலையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் விரிவாக்கத்திற்கு போதிய இடம் இல்லாத காரணத்தால் சென்ட்ரல், எழும்பூருக்கு பதில் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. தமிழகத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்ட திருநெல்வேலி, கோவை மற்றும் நாகர்கோவில் ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன. ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் தற்போது சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.

இனிமேல் புதிதாக அறிவிக்கப்படும் தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் அனைத்தும் எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் ஆனது அந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்து வருகிறது. ஆனால் சென்ட்ரல், எழும்பூர் போல் தாம்பரம் ரயில் நிலையம் ஆனது மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பெற்ற ரயில் நிலையமாக இல்லை. அதனால் தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக மாற்றும் பணி (The 3rd Full Fledged Railway Station At Tambaram) ஆனது நடைபெற உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மத்திய அரசு 1000 கோடி செலவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளப் போகிறது :

தாம்பரம் ரயில் நிலையத்தில்,

  • எஸ்கேலட்டர்கள்
  • டிஜிட்டல் பலகைகள்
  • அதிநவீன கழிவறைகள்
  • புதுப்பிக்கப்பட்ட சேர்கள்
  • நடை மேம்பாலங்கள்
  • பார்க்கிங் வசதிகள்
  • குடிநீர் வசதிகள்
  • விளக்குகள்
  • பிளாட்பார்ம்கள்

என எல்லாமே புதிதாக மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக முழுமையாக 3வது முனையமாக தாம்பரம் ரயில் நிலையத்தை மாற்றும் பணி (The 3rd Full Fledged Railway Station At Tambaram) ஆனது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது மின்சார ரயில்களுக்காக 8 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக புதிய 2 நடைமேடைகள் No.9 மற்றும் No.10 ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் 14-ம் தேதிக்குள் நடைமேடை No.9-ல் தண்டவாளங்கள் அமைக்கும் பணி முடிவடைய உள்ளதாகவும், இந்த நடைமேடைப்பணி முடிவடைந்த பின்னர் நடைமேடை No.9-ல் விரைவு ரயில்களும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். நடைமேடை No.10-ல் தண்டவாளம் அமைக்கும் பணி இன்னும் சில வாரங்களில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

The 3rd Full Fledged Railway Station At Tambaram - தாம்பரம் விரைவு ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது :

கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி முதல் விரைவு ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது தண்டவாளத்தில் உள்ள 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் மாற்றப்பட உள்ளது. இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரைவு ரயில் வழித்தடத்தில் உள்ள தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்பட்டு அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணி ஆனது நடந்து கொண்டிருக்கிறது.

இதேபோல, வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்படும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து அதிகரித்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்ற தண்டவாளங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் ‘கிராஸ் ஓவர்’ வேலையும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் தற்போது 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் கிராஸ் ஓவர் செய்து வருகின்றன. இனிமேல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் ‘கிராஸ் ஓவர்’ செய்வதற்கான பணிகள் ஆனது நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சென்னையை அடுத்த பகுதி என்று கருதப்பட்ட தாம்பரம் தற்போது சென்னையின் மையப்பகுதியாக வளர்ந்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply