மாதம் 8 கோடி வருமானம் ஈட்டும் 'The Chatpata Affair'
5000 சம்பளம் வாங்கிய ஷிஜூ பாபன் இன்று 8 கோடி மாத வருமானம் ஈட்டும் 50 துரித உணவுகடைகளின் சொந்தக்காரர். ‘The Chatpata Affair’ சென்னை நங்கநல்லூர் பகுதி பிரதான சாலையில் உள்ள உணவுக்கடை ஆகும். அந்த ‘The Chatpata Affair’ உணவுக்கடையில் காலை முதல் இரவு வரை சாட், பல்லே சாட், பாப்ரி சாட், பாதாம் பால், ரோல்ஸ், சாண்ட்விச்கள், ஷேக்ஸ் என்று ஃபியூஷன் உணவுகள் உட்பட கிட்டத்தட்ட 200 ஐட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் உரிமையாளார் ராஜஸ்தானில் உள்ள சிறிய நகரத்தைச் சேர்ந்த ஷிஜூ பாபன். சத்பட்டாவின் நிறுவுனர் ஷிஜூ பாபன் தனது இளமை பருவத்தில் தாய் தந்தையரை இழந்தவர். இவர் தனது இளமை காலம் முதலே உழைத்து வாழ்ந்து வந்தார்.
1997ல் ஷிஜூ பாபன் டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் உள்ள ஒரு பீஸ்ஸா ஹட் நிறுவனத்தில் அவர் வேலைக்கு சேர்ந்து உழைத்து வாழ்ந்தார். பீட்சா ஹட் நிறுவனத்தில் உணவகத்தை சுத்தம் செய்வது முதல் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வது மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்வது வரை அனைத்தையும் செய்து வந்துள்ளார். ஷிஜூ பாபன் கொஞ்சம் கொஞ்சமாக பீட்சா ஹட் நிறுவனத்தில் தொழிலையும் கற்று வந்துள்ளார். அவரின் மாத வருமானம் வெறும் ரூ.5000 லிருந்து 6000 வரைதான் இருந்தது. இந்த மாத வருமானம் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு வாடகை மின்சாரம் என்று அவருக்கு சரியாக இருந்துள்ளது. ஷிஜூ பாபன் பீட்சா ஹட் நிறுவனத்தில் 20 வருட அனுபவம் பெற்றார்.
South Fried Chicken என்ற நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார்
ஷிஜூ பாபன் South Fried Chicken என்ற நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டார். பல நாடுகளின் செயல்பாடுகள் என்ன என்பதை South Fried Chicken என்ற நிறுவனத்தில் ஷிஜூ பாபன் கற்று தேர்ந்தார்.
ஷிஜூ பாபன் தானே 'The Chatpata Affair' நிறுவனத்தை தொடங்கினார்
- அதன் பிறகு ஷிஜூ பாபன் தானே ஒரு நிறுவனத்தை தொடங்கும் முயற்சியில் இறங்கினார். அது அவருக்கு பெரும் சவாலாக இருந்தபோதும் தன் முயற்சியை கைவிடவில்லை. ஷிஜூ பாபன் மேற்கத்திய துரித உணவுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய துரித உணவுகள் குறைவான பிரபலத்தை உள்ளதை கவனித்தார். இந்திய துரித உணவுகளின் பிரபலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி ‘The Chatpata Affair’ சத்பட்டாவை தொடங்கினார். இந்தியர்கள் சமோசா மற்றும் சாட்கள், பர்கர்கள் மற்றும் பீட்சாக்கள் போன்றவற்றை பெரிதும் விரும்பி சாப்பிடுவதை ஷிஜூ பாபன் உணர்ந்து, சத்பட்டாவில் அதை தயாரிப்பதில் அதிக கவனம் கொண்டார்.
- கோவிட் 19 ல் தொற்றுநோய்களின் போது ஒரு முயற்சியைத் தொடங்குவது என்பது சவாலான செயல் என்ற அந்த சமயத்தில்தான் ஷிஜூ பாபன் தனது சத்பட்டாவைத் தொடங்கினார். மொபைல் கார்ட் மாடலை ஷிஜூ பாபன் தனது துரித உணவிற்கு தேர்வு செய்தார். வெறும் ரூ.5 லட்ச முதலீட்டில் ஆரம்பித்தார். ஷிஜூ பாபவின் சத்பட்டாவின் சுவை அலாதியானதாக இருக்கவே மக்கள் இவரின் கடையை நோக்கி படை எடுக்க ஆரம்பித்தனர்.
- ஷிஜூ பாபா வெறும் ரூ.5 லட்ச முதலீட்டில் ஆரம்பித்த துரித உணவு கடையான சத்பட்டா மொபைல் கார்ட் இன்று நாடு முழுவதும் 50 இடங்களில் முன்னிலை வகிக்கும் துரித உணவகமாக செயல்பட்டு வருகிறது. பெங்களூரு, சென்னை, குர்கான் மற்றும் ஹைதராபாத் என்று பல இடங்களில் ‘The Chatpata Affair’ தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தற்பொழுது ஷிஜூ பாபாவின் மாத வருவாயானது 8 கோடியாக உயர்ந்துள்ளது.
- ஷிஜூ பாபா இந்தியவைத்தாண்டி உலகநாடுகளான கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் சத்பட்டாவை திறக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். ஷிஜூ பாபாவின் இலக்கு 2027ல் 1000 கோடியை தொடவேண்டும் என்பது ஆகும். ஷிஜூ பாபா ஷிஜூ ஒரு பீட்சா ஹட் நிறுவனத்தில் ஒரு ஊழியராக இருந்து இன்று மில்லியன் டாலர் வணிகத்தை நடத்துவதற்கு அவரின் நீண்ட உழைப்பை அற்பணித்துள்ளார்.
Latest Slideshows
-
Children's Day 2024 : குழந்தைகள் தின வரலாறும் முக்கியத்துவமும்
-
Miss You Teaser : சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படத்தின் டீசர் வெளியீடு
-
Shiva Rajkumar In Thalapathy 69 : தளபதி 69 படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார்
-
ITBP Recruitment 2024 : இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு பிரிவில் 526 பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
ISRO Provide Navigation Signal : மொபைல் போனில் நேவிகேஷன் சிக்னல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது
-
அரியலூரில் ரூ1000 கோடி முதலீட்டில் தைவானின் Teen Shoes நிறுவனம்
-
Indian Team New Captain : இந்திய அணியின் கேப்டன் யார்? சஸ்பென்ஸ் வைத்த கம்பீர்
-
Discovered A New Planet : பூமி மாதிரியே இருக்கும் புது கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
-
Kanguva Trailer : சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
Mushroom Benefits : தினமும் காளான் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்