The Door Movie First Look: தி டோர் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுக்கும் பாவனா

நடிகை பாவனாவை உங்களால் மறக்கவே முடியாது. சமீப காலமாக தமிழில் அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார். இந்நிலையில் தற்போது இயக்குனரான ஜெயதேவ் அடுத்து இயக்கவிருக்கும் திரைப்படத்தில் பாவனா தான் கதாநாயகி என்கிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் விறுவிறுப்பு ஜானரியில் உருவாகும் இப்படத்தில் பாவனா ஆர்க்கிடெக்ட்டாக நடிக்கவிருக்கிறார். 2018 இல் வெளியான பட்டினப்பாக்கம் திரைப்படமே இயக்குனர் ஜெயதேவ் இயக்கத்தில் வெளியான கடைசி திரைப்படமாகும். தற்போது ‘தி டோர்’ என்ற பெயரில் திரில்லர் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தமிழில் எடுக்கப்பட்டு ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யவுள்ளனர்.

இந்த படத்தில் பாவனாவுடன் பிரியா வெங்கட், கணேஷ் வெங்கடராமன், ஸ்ரீரஞ்சனி, கபில் வேலவன் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். கௌதம் ஜி படத்தின் ஒளிப்பதிவை கையாள்கிறார், இசைமைப்பாளர் கௌதம் ஜி படத்தின் ஒளிப்பதிவைக் கையாளுகிறார். இப்படத்திற்கு வருண் உன்னி இசைமைக்கிறார்.சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் படத்தில் கொஞ்சம் ஹாரர் கலந்து கொடுத்தால் ரசிகர்கள் விரும்புவார்கள் என்பதால் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போதே படத்தில் சில திகில் கூறுகளைச் சேர்த்ததாக ஜெயதேவ் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் ஜெயதேவை பார்த்து பாவனா உங்கள் தங்கை தானே. ஏன் இதுவரை அவரை வைத்து படம் எடுக்கவில்லை? என்ற கேள்விக்கு பதிலாக இதுவரை நான் எடுத்த படங்களில் பாவனாவுக்கு ஏற்ற காதாபாத்திரங்கள் என்று என எதுவுமே பொருந்தவில்லை. ஆனால் இந்தப்படம் முற்றிலும் பாவனாவுக்கு படம் முழுக்க முழுக்க பொருத்தமாக இருக்கும் என்று நினைத்ததால் அவரை கதாநாயகியாக நடிக்க வைத்தேன். இதைப் பற்றி அதிகம் சிந்திக்க எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

இயக்குனர் ஜெயதேவ் கைவிடப்பட்ட பேய் பங்களாக்களில் தங்கி அங்குள்ள பேய்களின் நடமாட்டத்தை கவனிப்பது தனக்கு மிகவும் பிடித்த வேலை என்றும், பலமுறை அங்கு சென்று தங்கியிருக்கிறேன் என்றும் இயக்குனர் ஜெயதேவ் குறிப்பிட்டுள்ளார். அப்படி அங்கு தங்கியிருக்கும் போது தன்னை ஆவிகள் வந்து பார்ப்பது போல் உணர்ந்ததாகவும், ஆனால் அதுபற்றி தனக்கு எந்த பயமும் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply