The Elephant Whisperers: ஆவணப்படத்திற்கு 1 கோடி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
இயக்குனர் கார்த்திகி கொன்சால்வ் இயக்கிய “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” (The Elephant Whisperers) ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆஸ்கர் விருது பெற்று உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்”(The Elephant Whisperers) என்ற ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கன்சோல்வ்ஸ் அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாய் காசோலையை வழங்கி பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். அப்போது இயக்குனர் கார்த்திகி கான்சால்வேஸ், முதல்வருக்கு தனக்கு வழங்கப்பட்ட ‘ஆஸ்கர்’ விருதை காட்டி வாழ்த்து பெற்றார்.
முதுமலை யானைகள் முகாமில் எடுக்கப்பட்ட ஆவணப்படமான “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” (The Elephant Whisperers) ஆவணப்படத்திற்கான குறும்படப் பிரிவில் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இந்த குறும்படத்தை இயக்குனர் ‘கார்த்திகி கன்சோல்வ்ஸ்’ அவர்களால் இயக்கப்பட்டது. இந்த குறும்படமானது தமிழ்நாடு வனத்துறையின் கீழ் பராமரிப்பாளர்களால் இளம் யானைக் குட்டிகளை பராமரிக்கும் முறையை மையமாகக் கொண்டு இக்குறும்படம் இயக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பணிபுரியும் யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரால் ஆறு மாத வயது யானை குட்டியான “ரகு” எவ்வாறு முகாமிற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை இந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது. மேலும் அதே முகாமில் பராமரிப்பாளர்களால் வளர்க்கப்பட்ட மற்றொரு குட்டி யானையான “அம்மு” பற்றிய கதையையும் ஆவணப்படம் விவரிக்கிறது.
The Elephant Whisperers ஆவணப்படம் சினிமா துறையில் மிக உயரிய விருதான “ஆஸ்கர்” விருதை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. The Elephant Whisperers ஆவணப்படத்தின் மூலம் தமிழக வனத்துறையின் யானைகள் பாதுகாப்பு பணிகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. இதைப் பாராட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், வனத்துறைக்கு பெருமை சேர்த்ததற்காக, ஆஸ்கர் விருது பெற்ற “தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்” (The Elephant Whisperers) ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கான்சால்வேஸுக்கு பாராட்டுச் சான்றிதழும், ரூ.1 கோடி காசோலையும் வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஆதரவற்ற குட்டி யானை “ரகு”வின் பராமரிப்பாளர்களான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோருக்கு 15.03.2023 அன்று தலா ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழுடன் பாராட்டினார். மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமிலும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் “கோழிகம்முத்தி’ யானைகள் முகாமில் பணிபுரியும் 91 யானை பாகன்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரணத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், முதன்மைச் செயலர் வி.இறையன்பு, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாகு, முதன்மை முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், முதன்மை வன உயிரினக் காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.