The Kerala Story Screening in Theatres: திரைக்கு வந்த "தி கேரளா ஸ்டோரி"

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. பாலிவுட் இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதா ஷர்மா நாயகியாக நடித்துள்ளார்.

The Kerala Story படத்தின் மீது எதிர்ப்பு

‘தி கேரளா ஸ்டோரி’ என்ற ஹிந்திப் படத்தின் டிரைலர் வெளியானபோது, ​​இது அரசுக்கு எதிராக எடுக்கப்பட்ட வகுப்புவாதப் படம் போல் இருப்பதாகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரை பார்த்து இப்படம் பல்வேறு உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

எனவே கேரளாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்று இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.கே. சனோஜ் தெரிவித்திருந்தார். மேலும், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடக் கூடாது என கேரளாவைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த பலர் சமூக வலைதளங்களில் கேரளாவின் பன்முகத்தன்மையை உயர்த்தி கருத்துகளை பதிவிட்டனர். இந்நிலையில், ஒரு மசூதிக்குள் நடந்த இந்து விழாவின் வீடியோ ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் பகிர்ந்து கொண்டு, மனிதனின் அன்பு அளவிட முடியாதது என்று கூறினார். இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி திரைக்கு வந்துள்ளது.

"The Kerala Story" கதை சுருக்கம்:

ஷாலினி எனும் அய்யர் வீட்டு பெண்ணாக கேரளாவில் உள்ள அதா ஷர்மா நர்சிங் படிப்பதற்காக காசர்கோட்டில் உள்ள ஹோட்டலில் வசிக்கிறார். அதா ஷர்மா ஒரு அய்யர் இல்லத்தரசி. அவர்களுடன் ஹீரோயின் சித்தி இட்னானி, ஒரு கிறிஸ்துவப் பெண்ணும், ஒரு முஸ்லிம் பெண்ணும் தங்குகிறார்கள். இதில் இஸ்லாமிய பெண் ஒரு ஐஎஸ் தீவிரவாதின் ஆள் என்பதால், இந்த மூன்று பெண்களையும் பிரைன் வாஷ் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறாள். அதாவது பர்தா அணிந்தால் பாலியல் பலாத்காரமே நடக்காது எனவும் அல்லா தான் சிறந்த கடவுள் எனவும் கூறி கூறியே அந்த பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றம் செய்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய இளைனர்களை வைத்து அந்த பெண்களை காதலிக் வைத்து கர்பம் ஆக்கி விடுகின்றனர்.

அதா ஷர்மா தனது கணவருடன் சிரியா போகும்போது தான் ஐ.எஸ் தீவிரவாதியாக மாற்றவே இஸ்லாமியர்கள் இப்படி ஒரு சூழ்ச்சியை செய்துள்ளனர். மேலும் இந்து பெண்களை அங்கே கொண்டு வந்து தீவிரவாதிகளாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும் மாற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் அதா ஷர்மா அந்த நரகத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறாள். இறுதியில் தப்பித்தாரா..? அல்லது இல்லையா..? என்பது தான் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் கதைக்களமாகும்.

The Kerala Story திரை விமர்சனம்

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் தருணங்களை இயக்குனர் கொடுத்துள்ளார். முக்கியமான விஷயங்களைக் கையாளும் போது, ​​சமநிலையைப் பெறுவது சவாலாக இருக்கலாம், ஆனால் சுதிப்தோ அதை எளிதாகக் கையாள்வதாகத் தோன்றுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளை சிறப்பாக காட்சிபடுத்தியுள்ளனர். மேலும் படத்தில் பின்னணி இசையும் குறைந்துள்ளது.

தி கேரளா திரைப்படம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாக கொண்டிருப்பதாக இணைய விமர்சனங்கள் கூறப்படுகிறது. ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு நீண்ட வாட்ஸ்அப் ஃபார்வேர்டுக்கு மேல் இல்லை. இந்த படம் பல்வேறு எதார்த்தங்களை கேள்விக்குள்ளாக்கி இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி “ஐஎஸ்ஐஎஸ்” அமைப்பை சேர்ந்தவர்களானார்கள் என்பதை விளக்கும் வகையில் காட்சிகள் கொண்டிருக்கின்றன. ஒட்டு மொத்த கேரளாவும் ஒரு வெடிகுண்டின் மீது அமைந்து இருப்பது போல படத்தில் காட்டியுள்ளதாகவும் இணைய விமர்சனம் கூறியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply