The Kerala Story Shows Cancelled: தமிழ்நாட்டில் நேற்று முதல் அனைத்து காட்சிகளும் ரத்து
தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள அனத்து திரையரங்குககளிலும் “தி கேரளா ஸ்டோரி” படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை பிரபல இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கியுள்ளார்.மேற்கு வங்காளத்தை சேர்ந்த இயக்குனர் சுதிப்தோ சென் இந்த படத்தின் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
டீசர் வெளியாகி பெரும் சர்ச்சை
டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் கேரளாவில் இருந்து இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் எந்தப் அப்டேட்டும் இல்லாத நிலையில்கடந்த வாரத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லரில், 3 மதத்தைச் சேர்ந்த பெண்களும், ஒரு முஸ்லிம் பெண்ணும் கல்லூரியில் தோழிகளாக மாறுகிறார்கள். அந்த முஸ்லீம் பெண்ணின் உதவியுடன் மீதி பெண்களை மதம் மாற்றுகிறார்கள்.
அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி சூழலை உருவாக்கி இவரால் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும் என்று அந்தப் பெண்களை நம்பவைத்து, அவர்களை ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கின்றனர். பின்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர். மேலும் இது உண்மைக் கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவப் பெண்களை ஆப்கானிஸ்தானுக்கு அழைத்துச் சென்று அங்கு வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றி ISIS இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் இடம்பெட்டிருந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி கேரளா ஸ்டோரி வெளியீடு
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள படம் என்று பல்வேறு மாநிலங்களில் பலர் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆனால், நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் கடந்த 5ம் தேதி வெளியானது. தமிழகத்திலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.
இந்த படத்திற்கு மக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாலும், இஸ்லாமிய தரப்பில் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். திரையரங்குகள் முன்பும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், நேற்று முதல் (மே 7) அனைத்து தியேட்டர்களிலும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.