The Road Trailer : தி ரோட் படத்தின் டிரைலர் வெளியீடு...

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் படமான ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் (The Road Trailer) தற்போது வெளியாகி உள்ளது.

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் படம் தி ரோட் ஆகும். இந்தப் படத்தை அருண் வசீகரன் இயக்குகிறார். த்ரிஷாவுடன் சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் சபீர், மியா ஜார்ஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். AAA சினிமா நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்துள்ளது. இசைமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். மதுரையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Road Trailer :

இந்நிலையில் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள ‘தி ரோட்’ படத்தின் டிரைலர் (The Road Trailer) தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது. மதுரையில் NH 44 நெடுஞ்சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டமிட்டு நடத்தப்படும் விபத்துகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று த்ரிஷா விசாரிக்கிறார். ஒரு த்ரில்லர் படத்தின் தீவிரம் படம் முழுக்க இருக்கும் என்பது டிரைலரிலேயே தெரிகிறது.  சாம்.சி.எஸ் – இன் பின்னணி இசை கச்சிதமாக அமைந்துள்ளது. மேக்கப் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸுடன் வருகிறார் த்ரிஷா. நாயகியை மையப்படுத்தி வெளியான அவரது முந்தைய படங்களின் சறுக்கல்களை ‘தி ரோட்’ திரைப்படம் சரிசெய்யும் என்று கூறப்படுகிறது. தற்போது டிரைலர் (The Road Trailer) இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply