The World Bank Report - “Israel-Hamas War ஆனது எண்ணெய் விலை உயர்வை ஏற்படுத்தும்”

  • The World Bank Report : World Bank 30/10/2023 திங்களன்று ஒரு அறிக்கையில், “தற்போதைய இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தால், எண்ணெய் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு ஆனது  மேலும் ஒரு மோசமான சீர்குலைக்கும் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.
  • World Bank’s Chief Economist, Indermit Gill, “உலகப் பொருளாதாரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே சீர்குலைக்கும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அது இன்றுவரை தொடர்கிறது” என்று கூறினார்.

சமீபத்திய சூழ்நிலையில் எண்ணெய் விலை விவரங்கள் :

சமீபத்திய இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான சண்டைக்குப் பின்னர் எண்ணெய் விலை 6% உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஆனது தோராயமாக 8% அதிகரித்துள்ளது. இவை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இந்த சூழ்நிலையில் இனிமேல் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு  3% – 13% அதாவது $93 முதல் $102 வரை உயரக்கூடும். இது தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் விலை $121 வரை உயரும் என்று கருதுகிறது. மேலும் இதே நிலை தொடர்ந்தால் ஒரு மோசமான சூழ்நிலையில் எண்ணெய் விலை உயர்வு ஆனது $140 மற்றும் $157 க்கு இடையில் உச்சத்தை எட்டும் (இது 2008 க்குப் பிறகு இதுவரை காணப்படாத அதிகமாக இருக்கும்).

இஸ்ரேலிய பிரதம மந்திரி Benjamin Netanyahu போரின் இரண்டாம் கட்டத்தை அறிவித்ததால், இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் காலாட்படை வார இறுதியில் காஸாவிற்குள் தள்ளப்பட்டுள்ளன. ஹமாஸ் அதிகாரிகள் லெபனானில் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா உட்பட நட்பு நாடுகளிடம் இருந்து மேலும் பிராந்திய உதவிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

The World Bank Report - World Bank அறிக்கை :

World Bank அறிக்கை ஆனது சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தடங்கல் ஏற்பட்டால் என்று 3 காட்சிகளை    உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்காக உருவகப்படுத்தி  உள்ளது. 

  • ஒரு “சிறிய இடையூறு” என்ற சூழ்நிலையில் மோதல்கள் விரிவடையவில்லை என்றால் விளைவுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். தற்போதைய எண்ணெய் விலை பீப்பாய்க்கு சுமார் $US90 என்ற நிலையிலிருந்து அடுத்த 2024 ஆம் ஆண்டு சராசரியாக $US81 ஆக குறையும் என எதிர்பார்க்கலாம்.
  • ஒரு “நடுத்தர இடையூறு” என்ற சூழ்நிலையில் ஈராக் போரின் போது ஏற்பட்ட இடையூறுகளுக்கு சமமான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 100 மில்லியன் பீப்பாய்களின் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஆனது ஒரு நாளைக்கு 3 மில்லியன் முதல் 5 மில்லியன் பீப்பாய்கள் வரை குறையும். இதனால் எண்ணெய் விலைகள் 35% வரை உயரலாம்.
  • ஒரு “பெரிய இடையூறு” என்ற சூழ்நிலையில் – 1973 இன் அரபு எண்ணெய் தடையுடன் ஒப்பிடுகையில் – உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 6 மில்லியன் முதல் 8 மில்லியன் பீப்பாய்கள் வரை சுருங்கும் மற்றும் விலைகள் 56% முதல் 75% வரை அல்லது US $ 140 வரை உயரலாம்.

World Bank's Deputy Chief Economist, Ayhan Kose Report :

World Bank’s Deputy Chief Economist, Ayhan Kose Report, “எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாமல் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும். பிராந்தியத்திற்குள் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மையை தீவிரப்படுத்தும். கடுமையான எண்ணெய் விலை அதிர்ச்சி ஏற்பட்டால், அது ஏற்கனவே பல வளரும் நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ள உணவு விலை பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும்” என்று கூறினார். “மேலும் மோதல் ஆனது தீவிரமடைந்தால், உலகப் பொருளாதாரம் பல தசாப்தங்களில் இல்லாத வகையில் முதல் முறையாக இரட்டை ஆற்றல் அதிர்ச்சியை எதிர்கொள்ளும்” என்று கூறினார். (உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கின் மோதல்கள் இரண்டிலிருந்தும்).

இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை ஆனது பரந்த மத்திய கிழக்கு மோதலுக்கான ஒரு அச்சத்தை எழுப்பியுள்ளது. ஒரு மிகவும் மோசமான சூழ்நிலையில், சவூதி அரேபியா போன்ற முன்னணி அரபு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியைக் குறைத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஆனது ஒரு நாளைக்கு 6 மில்லியன் முதல் 8 மில்லியன் பீப்பாய்கள் வரை சுருங்கக்கூடும். இதனால் எண்ணெய் விலை பீப்பாய் $140 முதல் $157 வரை இருக்கும்.

The World Bank Report : World Bank ஆனது இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தீவிரமடைந்தால் எண்ணெய் விலை 150 டாலர்களை எட்டும் என்றும் மேலும் மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்தால் கச்சா விலை பீப்பாய்க்கு $150க்கு மேல் உயரக்கூடும் என எச்சரித்துள்ளது. அமெரிக்கா மிகப்பெரிய எண்ணெய் பற்றாக்குறையை சந்திக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தற்போதைய உலகளாவிய எண்ணெய் தேவை சுமார் 102 மில்லியன் b/d ஆகும்.

Latest Slideshows

Leave a Reply