Theatres Reopening in Kashmir: காஷ்மீரில் திரையரங்குகள் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது
32 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் மிக அழகான திரையரங்குகளைக் கொண்டிருந்தது. இங்கு 80கள் மற்றும் 90களின் முற்பகுதியில் போர்க்குணத்தின் அதிகரிப்பு காரணமாக திரையரங்குகளை இழக்க வேண்டியிருந்தது. இப்பகுதியில் தீவிரவாதம் தலைதூக்கியபோது பள்ளத்தாக்கில் திரையரங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, காஷ்மீரில் சினிமாக்கள் இல்லை.
காஷ்மீரின் முதல் திரையரங்கம் பாய் அனந்த் சிங் கௌரி என்பவரால் 1932 இல் லால் சௌக்கில் கட்டப்பட்டது. இந்த தியேட்டர் “முதலில் காஷ்மீர் டாக்கீஸ்” என்று பெயரிடப்பட்டது. பின்னர் பல்லேடியம் என மாற்றப்பட்டது.
காஷ்மீரில் 1980களில் சுமார் 15 திரையரங்குகள் இருந்தன. 15 திரையரங்குகளில் 9 ஸ்ரீநகரில் செயல்பட்டன. பிராட்வே, ரீகல், நீலம், நாஸ், கயாம் மற்றும் ஷெராஸ் ஆகியவை பிரபலமான திரையரங்குகள்.
காஷ்மீரில் உள்ள சினிமா தியேட்டர்கள் 1989 இல் தீவிரவாதத்தின் “திரைப்படங்கள் இஸ்லாமுக்கு மாறானவை” என்று முத்திரை குத்தப்பட்டு அழிக்கப்பட்டன. கடந்த Sept 19, 2022-ல் புல்வாமா மற்றும் ஷோபியானில் இரண்டு மினி தியேட்டர்களை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் Jadooz நிறுவனம் திறந்தது.
32 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் ‘ RRR ’ ஆகும். சமூக ஊடக பக்கம் “காஷ்மீரின் வரலாற்று நாள்” என்று வாசகத்துடன் ஒரு படத்தைப் பகிர்ந்தது. ‘Jadooz’ மற்றும் ‘Manomay’ ஆகியோரால் இது சாத்தியமாகியுள்ளது,
Jadooz Media Solution Private Limited - ஒரு குறிப்பு
Jadooz என்பது சென்னையை தளமாகக் கொண்ட இந்தியாவின் கிராமப்புறங்களில் மினி தியேட்டர்களை அமைக்கும் ஒரு பொழுதுபோக்கு ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இது பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை ஷோபனா, நடிகர் ரன் விஜய் மற்றும் திருச்சி NITயைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான ராகுல் நெஹ்ரா ஆகியோரால் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள “Jadooz Media Solution Private Limited-ன் தலைமையகம் Noida, UP-ல் அமைந்துள்ளது. Jadooz ன் மதிப்பு $2.78M. இந்திய நாட்டில் பொழுதுபோக்க உதவும் சிறிய மற்றும் நவீன திரையரங்குகளை கொண்டு வருவது மகிழ்ச்சி தரும் பெருமைக்குரிய விசஐம் ஆகும்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு புன்னகையை வரவழைத்து, காஷ்மீர் மக்களை மகிழ்விக்க இது உதவும் என்று நம்புவதாகவும் ‘ஜாடூஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராகுல் நெஹ்ரா தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய துணைக்கண்டம், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் 1200 Jadooz மண்டலங்களை அமைக்க Jadooz முயற்சிக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் மினி தியேட்டர்களை அமைக்கும் பணி
கடந்த Sept 19, 2022-ல் புல்வாமா மற்றும் ஷோபியானில் இரண்டு மினி தியேட்டர்களை ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் Jadooz நிறுவனம் திறந்தது. பாலிவுட் மற்றும் பிராந்திய திரைப்படங்களைக் காண்பிக்கும் 50-70 இருக்கைகள் கொண்ட திரையரங்குகளை Jadooz நிறுவனம் உருவாக்கி உள்ளது. திரைகளை அமைக்கவும் மற்றும் வசதிகளை தயார் செய்யவும் Jadooz-க்கு சுமார் 15 நாட்கள் ஆனது.
கடந்த 10 மாதங்களாக ஷோபியான் மற்றும் புல்வாமாவில் மினி சினிமா அரங்குகளை நடத்தி வரும் Jadooz நிறுவனம் ஆனது பாரமுல்லா, ஹந்த்வாரா மற்றும் பந்திப்பூரில் மினி தியேட்டர்களை திறக்கிறது. இந்தத் திரைகள் ஜூன் இறுதிக்குள் நேரலையில் இருக்கும்.
இடம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து இந்தத் திரைகளை அமைக்க ரூ. 50 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்வதாக Jadooz நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான ராகுல் நெஹ்ரா கூறுகிறார். நிறுவனம் பஹல்காமின் பீடாப் பள்ளத்தாக்கில் ஒன்றைத் திட்டமிடுகிறது.
Jadooz ஜம்முவைச் சேர்ந்த Manomay நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ( இளம் தொழில்முனைவோர் சுஷாந்த் ஷர்மா தலைமையிலான ஜம்முவைச் சேர்ந்த ‘ Manomay’ ). இப்போது அடம்பூர், கதுவா மற்றும் பதர்வா ஆகிய இடங்களில் Jadooz நிறுவனம் திரையரங்குகளைக் கொண்டு வரவுள்ளது.
‘Jadooz & Manomay ’ 50 திரைகளை காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கொண்டு வர உள்ளது. நாங்கள் பள்ளத்தாக்குகளில் அதிகமான திரையரங்குகளைக் கொண்டு வர விரும்புகிறோம். மேலும் இரண்டு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 50 திரைகளையும், இறுதியில் இந்த யூனியன் பிரதேசத்தின் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு திரையையும் 24 மாதங்களில் கொண்டுவர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.இது பொழுதுபோக்க உதவும் என்று நம்புகிறோம் என்று Jadooz நிறுவனம் கூறுகிறது.