Theri Hindi Remake : தெறி இந்தி ரீமேக் | டைட்டிலை அறிவித்த அட்லீ

விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தெறி படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் (Theri Hindi Remake) செய்யப்படுகிறது. பிரியா அட்லீ தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கேபி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கோலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த அட்லீ, ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் என தளபதி விஜய்யை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் ரசிகர்களை வளைத்து போட்டார். கோலிவுட்டில் தனது திறமையை நிரூபித்த அட்லீ, இன்று பாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார். அந்த வகையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.

Theri Hindi Remake :

விஜய்யின் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தெறி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். போலீஸ் அதிகாரியாக விஜய்யின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தெறி படம் விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படமாகும். ஜவான் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டில் கலக்கி வரும் அட்லீ, தற்போது தெறி படத்தை இந்தியில் ரீமேக் (Theri Hindi Remake) செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், படத்திற்கான பூஜை கடந்த மாதம் கோலாகலமாக நடைபெற்றது.

இயக்குனர் அட்லீ தயாரிப்பில் சங்கி புங்கிலி கதவத் தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தெறி படத்தின் இந்தி ரீமேக்கிற்கு (Theri Hindi Remake) அட்லீ தான் தயாரிக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு “பேபி ஜான்” என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி.எஸ். அவினாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசைமைப்பாளர் தமன் இசைமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ‘மே 31’ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பேபி ஜான் (Theri Hindi Remake) என்ற தலைப்பில் ஒரு வீடியோ மற்றும் போஸ்டரை அட்லீ எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply