This Week Upcoming Movies : இந்த வாரம் திரைக்கு வரும் திரைப்படங்கள்...

This Week Upcoming Movies :

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பேசப்படும் முக்கிய திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாக உள்ளன. படங்களுக்கான புதுப்பிப்பு கூடுதல் எதிர்பார்பை ஏற்படுத்துகிறது. அடுத்த வருடம் வர இருக்கும் படங்களை பற்றி கூட தெரிந்து கொள்ளும் வகையில் ரிசர்ச் அறிவிப்புகள் வருகின்றன. கதாநாயகன், கதாநாயகி மற்றும் முன்னணி நடிகர்கள் இயக்குனர்கன் என அனைத்து தகவலும் தெரிந்துவிடுகிறது. இயக்குனர்களின் கதைகளுக்கு ஏற்றவாறு நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படங்களை பார்த்து ரசித்தோம். இப்போது இந்த வாரம் வெளியாகும் படங்கள் பற்றி பார்ப்போம்.

This Week Upcoming Movies - கிங் ஆஃப் கோதா:

துல்கர் சல்மான் மலையாள திரையுலகில் இருந்து ஒரு நடிகராக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து இந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். மற்ற ஹீரோக்கள் பான்-இந்திய படங்களில் நடித்து வரும் நிலையில், அந்தந்த மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து பான்-இந்திய நட்சத்திரம் என்ற சொல்லுக்கு புதிய அர்த்தம் கொடுத்துள்ளார் துல்கர். பாலிவுட் படமான Chup, தெலுங்கில் சீதாராமம், தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஆகிய படங்களில் நடித்து இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அந்த வகையில் அவரது அடுத்த படமான கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

ஆக்க்ஷன் அதிரடி படமாக உருவான இந்த படத்தை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். இப்படத்தில் துல்கருடன் ரித்திகா சிங், அனிகா சுரேந்தர், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் காதல் நாயகனாக வலம் வந்த துல்கர் சல்மான் நீண்ட இடைவேளைக்கு பிறகு அதிரடி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஆக்‌ஷன் படத்தில் துல்கர் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.

This Week Upcoming Movies - பாட்னர் :

மனோஜ் தாமோதரன் இயக்கியுள்ள திரைப்படம் பாட்னர் ஆகும். இதில் ஆதி, பாலக் லால்வானி, ஹன்சிகா மோத்வானி, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், யோகி பாபு, ரவி மரியா, தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராகவ் கலை இயக்கத்தில் பிரதீப் ஈ.வி.சசிகுமார் படத்தொகுப்பு செய்துள்ளார். நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தை ராயல் ஃபார்ச்சூன் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கோலி சூரிய பிரகாஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், படக்குழு தற்போது படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு வசனத்தையும் ரசித்து படமாக்கியிருக்கிறோம். எங்கள் ரசிகர்களும் எங்கள் மகிழ்ச்சியைப் பெறுவார்கள் என்று நம்புகிறோம். நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாகவும் மற்றும் ஜாலியாகவும் உழைத்து உள்ளனர். தயாரிப்பாளர் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். படத்துக்காக பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்துள்ளார். குழந்தைகளுடன் தியேட்டர்களுக்குச் சென்று பாப்கார்ன் சாப்பிட்டு சந்தோஷமாகப் பார்க்க வேண்டிய படம் இந்த ‘பாட்னர்’. அதிகம் யோசிக்காமல் படம் பார்த்தால், படம் நிச்சயம் பிடிக்கும். கதை, திரைக்கதை என ஆழமாகப் பார்த்தால் எதுவும் இல்லை. இது அதற்கான படம் அல்ல. மகிழ்ச்சியாகவும், கவலையை போக்கவும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம் என்று படக்குழு  தெரிவித்துள்ளது. இந்நிலையில் ‘பாட்னர்’ திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில், 25 ஆம், தேதி வெளியாக உள்ளது.

This Week Upcoming Movies - அடியே :

ஜி.வி.பிரகாஷ், கௌரி கிஷன் இணைந்து நடிக்கும் படம் ‘அடியே’ ஆகும். இதை விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, ஆர்.ஜே.விஜய், மதுமகேஷ் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், வெங்கட் பிரபு, வசந்தபாலன், சிம்புதேவன், ஏ.எல்.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஜி.வி.பிரகாஷ் பேசியதாவது, ‘அடியே’ ஒரு அறிவியல் புனைகதை காதல் கதையாகும். ‘சென்னையில் மழை பெய்யும், கார்கள் பறக்கும்’ என்று இயக்குனர் திடீரென கூறினார். “இதை எப்படி காட்சிப்படுத்துகிறீர்கள்?” இயக்குனரிடம் கேட்டேன். நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார். வழக்கத்தை விட சற்று வித்தியாசமான படத்தை எடுக்க நினைத்தேன். ‘அடியே’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு நல்ல குழு. இதில் வெங்கட் பிரபுவுடன் நடித்தேன். படப்பிடிப்பு இடைவேளையில் இருவரும் இசையைப் பற்றி பேசுவோம். இளையராஜா சாரின் பாடலைப் பற்றி பேசினோம். ஜஸ்டின் பிரபாகர் சிறந்த பாடல்களை கொடுத்துள்ளார். இது சாதாரண படம் இல்லை. புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளோம். ரசிகர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

This Week Upcoming Movies - ஹர்காரா :

ஹர்காரா 1990-களில் உருவாகி வரும் தமிழ் கால திரைப்படமாகும். கலர்ஃபுல் பீட்டா இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தை ராம் அருண் காஸ்ட்ரோ இயக்கி உள்ளார். ‘வி1 மர்டர் கேஸ்’ தயாரிப்பாளர்களிடமிருந்து இது மற்றொரு நம்பிக்கைக்குரிய தயாரிப்பு. நட்சத்திர நடிகர்கள் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்திலும் கௌதமி சௌத்ரி, நிக்கோலஸ் ஃபஸ்டர் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியாவின் முதல் தபால்காரரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. தீபக் கிருஷ்ணா ஆர் பாடல் வரிகளை எழுத, ராம்சங்கர் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலே, பார்த்த படங்கள் அனைத்தும் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளன, எனவே இவற்றை பார்த்து மகிழுங்கள்.

Latest Slideshows

Leave a Reply