Thudikkum Karangal Official Trailer : துடிக்கும் கரங்கள் படத்தின் ட்ரைலர் வெளியீடு

Thudikkum Karangal Official Trailer :

Thudikkum Karangal Official Trailer : இயக்குனர் வேலு தாஸ் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அதிகம் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விமல், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த விமல், பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அதையடுத்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. களவாணி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகர் விமல், இவர் நடிப்பில் வெளியான தூங்க நகரம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு மீண்டும் சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த ‘வாகை சூடவா’ திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றது. தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் சூப்பர் ஹிட்டான கலகலப்பு படத்தில் நாயகனாக நடித்த விமல் நகைச்சுவை படமாக ஹிட் ஆனது, தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற தவறினாலும் 2022 ஆம் ஆண்டு ஜீ5 தளத்தில் நேரடியாக வெளியான விலங்கு வெப் சீரிஸ் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து விமல் நடிக்கும் ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த வருடம் 2023ல் இதுவரை விமலின் தெய்வ மச்சான், குலசாமி ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் சண்டக்காரி, மஞ்சள் குடை, எங்கள் பாட்டன் சொத்து, மற்றும் லக்கி ஆகிய திரைப்படங்கள் வெளியாக தயாராக உள்ளன.

இதற்கிடையில் விமல் நடிக்கும் அடுத்த ஆக்ஷன் படமாக வெளியாக இருக்கும் படம் துடிக்கும் கரங்கள் ஆகும். இந்த படத்தை வேலு தாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.அண்ணாதுரை அவர்கள் ஒடியான் டாக்கீஸ் சார்பில், காளிதாஸ் மற்றும் வேலு தாஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடித்துள்ளார். மேலும் சதிஷ், சுரேஷ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசைமைப்பாளர் ராகவ் பிரசாந்த் இசைமைத்துள்ளளார். வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கும் பொது முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையே ட்ரைலர் இணையத்தில் (Thudikkum Karangal Official Trailer) வைரலாகி வருகிறது.

Latest Slideshows

Leave a Reply