Thug Life Movie : கமல், மணிரத்னம் கூட்டணியில் 'தக் லைஃப்' படம் உருவாக இருக்கிறது

'தக் லைஃப்' படக்குழுவினர் 'இன்று முதல் படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்' என்று குறிப்பிட்டு மாஸான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது :

‘தக் லைஃப்’ (Thug Life Movie) படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது மற்றும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த வீடியோவில், கமல் தன் பெயர்  ரங்க ராயர் சக்திவேல் நாயக்கன் மற்றும் தான் காயல்பட்டினக்காரன் என தனக்கே உரிய ஸ்டைலில் இன்ட்ரோ கொடுத்துள்ளார். ‘தக் லைஃப்’ (Thug Life) படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. X தளத்தில் இதற்கான போஸ்டர்களையும் பகிர்ந்துள்ளது. முன்னதாக இன்று வெளியாகவிருக்கும் அறிவிப்பு வீடியோவுக்கான போஸ்டர் ஒன்றையும் ‘தக் லைஃப்’ (Thug Life) படக்குழு பகிர்ந்திருந்தது.

அதில், கமல்ஹாசனின் தலை முழுவதும் மூடப்பட்டு கண்கள் மட்டும் தெரியும் வகையில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஆனது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், அந்த ‘தக் லைஃப்’ (Thug Life Movie) பட போஸ்டரில் “காலா  நான் உனை சிறு புல்லென மதிக்கிறேன், நீ எனது காலருகே வாடா, நான் சற்றே உனை மிதிக்கிறேன்” என்ற வரிகள் ஆனது எழுதப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகின் இருபெரும் ஜாம்பவான்களான கமல், மணிரத்னம் கூட்டணி ஆனது ‘நாயகன்’ படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது. இவர்களின் கூட்டணியில் ‘தக் லைஃப்’ பட ஷுட்டிங்கை படக்குழுவினர் முழுமையாக இம்மாதத்தில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

Thug Life Movie - 'தக் லைஃப்' படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பரான தகவல்கள் :

மெட்ராஸ் டாக்கீஸ் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் மற்றும் இப்படத்திற்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகை த்ரிஷா, நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் முதல் முறையாக இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் படத்தில் கெளதம் கார்த்திக் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கமலின் ‘KH 233’ குறித்தான அறிவிப்பு வெளியாகி இருந்தாலும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்த பின்னரே ‘KH 233’ படத்தில் நடிக்க இருப்பதாக குறிப்பிடத்தக்க தகவல் வெளியாகியுள்ளது.

Latest Slideshows

Leave a Reply