Thug Life Teaser : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசர்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் டீசர் (Thug Life Teaser) வெளியாகியுள்ளது. மேலும் டீசருடன் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர், சண்டைப் பயிற்சியாளர், பாடகர் என 5 வயதில் இருந்தே திரையுலகில் பங்காற்றி வரும் சிறந்த கலைஞர் ஆவார். எத்தனையோ நடிகர்கள் புகழின் உச்சிக்கு சென்று அடையாளம் தெரியாமல் மறைந்து போகும் சினிமாவில் இன்றும் திரையுலகமே வியந்து பார்க்கும் ஒரு கலைஞனாக தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

தக் லைஃப்

நடிகர் கமல்ஹாசனும் மணிரத்னமும் நீண்ட நாட்களாக நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரை ஒரே ஒரு படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளனர். அதுவும் தமிழ் சினிமா பிரமிப்பில் கொண்டாடும் தலைசிறந்த படைப்பான நாயகன். இப்படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து இருவரும் கூட்டணி அமைக்கவே இல்லை. 36 வருடங்களாக தங்களின் கூட்டணிக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இருவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். கமலும் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணையும் படத்திற்கு “தக் லைஃப்” என (Thug Life Teaser) பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிலம்பரசன், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசைமைத்துள்ளார்.

Thug Life Teaser & Release Date

நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை நவம்பர் 7ஆம் (இன்று) தேதி கொண்டாட உள்ள நிலையில் நாளை தக் லைஃப் படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு நேற்று அறிவித்தது. படக்குழு அறிவித்தபடி கமலின் பிறந்தநாளான இன்று காலை 11 மணிக்கு டீசர் வெளியாகும் என (Thug Life Teaser) அறிவித்தது. அதன்படி சுமார் 44 வினாடிகள் ஓடக்கூடிய வீடியோ படத்தின் தயாரிப்பை சிறப்பித்துக் காட்டுகிறது. இதில் இசை, சண்டைக்காட்சிகள், ஒளிப்பதிவு, காட்சியமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. படத்தில் பல நடிகர்கள் இருந்தாலும், டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளில் கமல்ஹாசனும் சிம்புவும் தோன்றுகின்றனர். மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

Latest Slideshows

Leave a Reply