Thulasi Benefits In Tamil : துளசி இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்!

Thulasi Benefits In Tamil : துளசி இலைகள் பொதுவாக இந்தியாவில் இருமல் மற்றும் சளி குணமாக பெரும்பான்மையான மக்களால் பச்சையாக உண்ணப்படும் தாவர இனமாகும். பாரம்பரியமாக, துளசி செடி ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஏனெனில் இது வாஸ்து நன்மைகளைக் கொண்டுள்ளது என்று மக்கள் இதனை நம்புகின்றனர். எனவே இந்திய மரபுகளில் இந்த செடிக்கு முக்கிய இடம் உண்டு.

துளசியின் இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், அழகுசாதனத் தொழிலிலும், வாசனை திரவியம், லோஷன், சோப்பு, மற்றும் ஷாம்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

Thulasi Benefits In Tamil :

Thulasi Benefits In Tamil - மன அழுத்தத்தை போக்க உதவுகிறது :

துளசி என்பது மன அழுத்தத்திற்கு எதிரான குணங்களைக் கொண்ட ஒரு இயற்கையான மூலிகையாகும். எனவே, ஒரு நபர் மன அழுத்தம் அல்லது கவலையாக உணரும்போது, ஒரு கப் துளசி டீயை பருகினால், புத்துணர்ச்சி பெற உதவும்.

Thulasi Benefits In Tamil - நோய் பாதுகாப்பு மற்றும் காயங்களுக்கு சிகிச்சை :

துளசி இலையில் நீண்ட காலமாக அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகள் உள்ளன. இது சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படும்.

Thulasi Benefits In Tamil - செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது :

துளசி இலை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது, அதனால் அது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது.

Thulasi Benefits In Tamil - உடல் எடையை குறைக்கும் :

துளசி உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் உடலில் இருந்து அதிகப்படியான நச்சுகளை வெளியிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது உடலில் வளர்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்துகிறது, மேலும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு செயல்முறையை ஒழுங்குபடுத்துகிறது.

Thulasi Benefits In Tamil - சிறுநீரக கற்களை கரைக்கும் :

இன்றைய உலகில் அதிகமான மக்கள், சிறுநீரக கற்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு துளசி ஒரு சிறந்த மருந்தாகும். மேலும் சிறுநீரக கற்களுக்கு முக்கிய காரணமான உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க உதவுகிறது.

Thulasi Benefits In Tamil - சருமத்திற்கு நல்லது :

துளசி இலையின் சாறுகள் சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் முகப்பருவைப் போக்க உதவுகிறது . இதில் “ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்” அதிகம் உள்ளதால், முன்கூட்டிய முதுமையைத் தடுக்க உதவுகிறது.

Thulasi Benefits In Tamil - நோய் எதிர்ப்பு சக்தி :

துளசியில் அதிகமான துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு கூறுகள் உள்ள. அவை நமக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நாம் தினமும் துளசி இலைகள் அல்லது துளசி டீயை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

துளசியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் :

  • ஆற்றல் – 22.4 கிலோகலோரி
  • உணவு நார்ச்சத்து – 1.6 கிராம்
  • நீர் – 92.06 கிராம்
  • பொட்டாசியம் – 295 மி.கி
  • கால்சியம் – 177 மி.கி
  • இரும்பு – 3.17 மி.கி
  • கார்போஹைட்ரேட் – 2.65 கிராம்
  • வைட்டமின் சி – 18 மி.கி

துளசி இலைகளின் பக்க விளைவுகள் :

கர்ப்பிணி பெண்களுக்கு :

துளசி இலைகள் கர்ப்பிணிப் பெண் மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமாம். ஒரு சில சூழ்நிலைகளில், இது கருச்சிதைவு கூட ஏற்படலாம் என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply