Thuppakki Re-release: கில்லியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் துப்பாக்கி
நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘துப்பாக்கி’ திரைப்படம்(Thuppakki Re-release) திரையரங்குகளில் மீண்டும் வெளியாகவுள்ளது. நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 50வது பிறந்தநாளை ஜூன் 22ஆம் தேதி கொண்டாடவுள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் விஜய், நடிப்பை முற்றிலுமாக கைவிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய்யின் அடுத்த இரண்டு படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து விஜய்யின் 69வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. நடிகர் விஜய் அரசியல் தலைவராக உருவெடுத்த பிறகு, விஜய்யை திரையில் பார்க்க முடியாது என்ற வருத்தத்தில் அவரது எல்லா படங்களையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த மாதம் வெளியான கில்லி திரைப்படம் திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை ஜூன் 22ஆம் தேதி சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் விஜய் நடித்த சில வெற்றிப் படங்கள் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகப் போகிறது. அதன்படி வெளிநாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் மீண்டும் வெளியாகிறது. இங்கிலாந்தில் உள்ள விஜய் ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க அஹிம்ஸா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.
துப்பாக்கி ரீ ரிலீஸ்(Thuppakki Re-release)
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் விஜய் நடிப்பில் 2012ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் துப்பாக்கி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கினார். இப்படத்தில் காஜல் அகர்வால், ஜெயராம், வித்யுத் ஜம்வால், மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அதிரடி திருப்பத்துடன், முருகதாஸின் விறுவிறுப்பான திரைக்கதையுடன், விஜய்யின் பிரபலமான படங்களில் துப்பாக்கியும் ஒன்று. அதிலும் குறிப்பாக இப்படத்தில் வரும் இண்டர்வெல் பிளாக் காட்சி தியேட்டரையே அதிர வைத்தது என்றே சொல்லலாம். ஏறக்குறைய 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Latest Slideshows
-
Google Cloud India : இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று
-
Thug Life Trailer : கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
-
TN Leads In Higher Education : தமிழ்நாடு உயர்கல்வி சேர்க்கையில் 47% பெற்று முன்னிலை வகிக்கிறது
-
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Jadeja Is Ranked 1152 In The ICC Rankings : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜா 458 புள்ளிகளுடன் 1152-வது நாளாக முதலிடம் நீடிப்பு
-
TNGECL Introduced 3 New Internet Services : TNGECL ஒரே நேரத்தில் 3 வகையான இணையதள சேவையை துவக்கி உள்ளது
-
Vasanth & Co Retail Success Story : நடுத்தர வர்க்க கனவுகளை தவணைகளில் நிறைவேற்றிய வசந்த் & கோ-வின் வெற்றி பயணம்
-
Tribute To Soldiers Of India : இளையராஜா X தளத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கு பாராட்டு
-
SBI Circle Based Officer Recruitment : எஸ்பிஐ வங்கியில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
NFBD Champ Awards 4.0 : நம்ம பேமிலி குரூப் நடத்தும் பிரமாண்ட விருது வழங்கும் விழா