Tiger 3 Box Office Collection Day 4 : டைகர் 3 படத்தின் மூன்று நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்

நடிகர் சல்மான் கான் நடித்து வெளியான டைகர் 3 மூன்று நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனைப் (Tiger 3 Box Office Collection Day 3) பார்க்கலாம். இயக்குனர் மணிஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள டைகர் 3 படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்டோஷ் ரானா, விஷால் ஜேத்வா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் யாஷ் ராஜ் ஸ்பை யுனிவர்ஸின் ஐந்தாவது வெளியீடாகும். கடந்த தீபாவளிக்கு சல்மான் கானின் ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான் மற்றும் வார் ஆகிய நான்கு படங்களும் வெளியானது.

முன்னதாக ஷாருக்கான் நடித்த பதான் படத்தில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது டைகர் 3 படத்திலும் இப்படி பல ரகசியங்களை காத்து வருகிறார்கள். பதான் படத்தில் இருந்து ஷாருக்கானும் வார் படத்தில் நடித்த நடிகர் ஹிரித்திக் ரோஷனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இது டைகர் 3 படத்திற்கு கிடைத்த பலத்த வரவேற்பிற்கு முக்கிய காரணம்.

முதல் நாள் வசூல் :

வெளியான முதல் நாளிலேயே டைகர் 3 ஹிந்தி சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்தது. ஹிந்தி திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூல் செய்த படம் என்ற பெயரை டைகர் 3 பெற்றுள்ளது. டைகர் 3 இந்தியாவில் ரூ.52.50 கோடியும் மற்ற நாடுகளில் ரூ.41.50 கோடியும் வசூலித்து தீபாவளி நாளில் மட்டும் 94 கோடி வசூல் செய்துள்ளது.

Tiger 3 Box Office Collection Day 3 :

திரையரங்குகளில் மூன்று நாட்களுக்குப் பிறகு, சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் டைகர் தொடரில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை டைகர் 3 பெற்றுள்ளது. டைகர் 3 மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 240 கோடி வசூல் (Tiger 3 Box Office Collection Day 3) சாதனை செய்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply