Tiger 3 First Look : சல்மான்கானின் “Tiger 3” படத்தின் First Look Poster வெளியிடப்பட்டுள்ளது
Tiger 3 First Look :
சல்மான்கானின் ‘டைகர் 3’ படத்தின் First Look Poster-டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் டைகர் 3 என்பதும் ஒன்று ஆகும். மனீஷ் ஷர்மா இயக்கி ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள டைகர் 3 என்பது ஒரு அதிரடி ஹிந்தி மொழி திரில்லர் திரைப்படமாகும்.
இந்த டைகர் 3 திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 2019 ஆம் ஆண்டு வெளியான பாரத் படத்திற்குப் பிறகு சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் மீண்டும் இப்படத்தில் இணைகின்றனர். இவர்கள் இருவரும் ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, மைனே பியார் கியூன் கியா மற்றும் பார்ட்னர் போன்ற வெற்றிப்படங்களின் இணைந்து நடித்து புகழ் பெற்ற ஜோடி நடிகர்கள் ஆவர்.
மேலும் இப்படத்தில் இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, ரன்வீர் ஷோரே, விஷால் ஜெத்வா மற்றும் ரித்தி டோக்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் YRF ஸ்பை யுனிவர்ஸில் ஐந்தாவது தவணை மற்றும் டைகர் ஜிந்தா ஹையின் தொடர்ச்சி ஆகும். சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்த படம் ‘ஏக் தா டைகர்’ 2012-ல் கபீர் கான் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. ‘ஏக் தா டைகர்’ படத்தில் இடம்பெற்ற சல்மான் கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றதால், அதே ‘டைகர்’ கதாபாத்திரத்தை வைத்து ‘டைகர் ஜிந்தா ஹே’ என்ற படம் 2017-ல் வெளியானது. அலி அப்பாஸ் ஜாஃபர் இப்படத்தை இயக்கியிருந்தார். தற்போது இதன் மூன்றாம் பாகமாக ‘டைகர் 3’ உருவாகி வருகிறது.
தேரே நாம் படத்திற்கு பிறகு இப்படத்தில் சல்மான் கான் மொட்டை அவதாரத்தில் காணப்படுவார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நன்கு வளர்ந்த தாடி மற்றும் மொட்டை அவதாரத்தில் இரண்டு கேரக்டர்களையும் கச்சிதமாக மாற்றுவதில் அதிக முயற்சி செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இப்படத்தில் நன்கு வளர்ந்த தாடியுடன் காணப்படுவார்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஸ்பை யுனிவர்ஸின் ஓர் அங்கம் இந்த டைகர் 3 திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதற்கு முன் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ படத்தில் சல்மான்கானின் ‘டைகர்’ கதாபாத்திரம் ஒரு காட்சியில் இடம்பெற்றுள்ளது. அதேபோல இனி வரும் படங்களில் இதற்குமுன் வந்த படங்களின் கதாபாத்திரங்கள் இடம்பெறலாம் என்று தெரிகிறது. இந்த டைகர் 3 திரைப்படத்தில் ஷாருக்கான் “பதான்” வேடத்தில் கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சல்மான் கான் டைகர் 3 படத்தில் நடித்ததற்காக 100 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார்.
Tiger 3 First Look : இப்படத்தின் போஸ்டரில், “டைகர் ஜிந்தா ஹே”, ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’, ஷாருக்கானின் ‘பதான்’ ஆகிய படங்களில் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி இந்த டைகர் 3 திரைப்படம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆக்ஷன் படத்திற்கு தற்போது ஹாலிவுட் அதிரடி இயக்குனர் மார்க் சிசாக்கை குழு இணைத்துள்ளதாக செய்தி நிறுவனமான ANI தெரிவித்துள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குனர் மார்க் சிசாக்கை, கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து டன்கிர்க் மற்றும் தி டார்க் நைட் ரைசஸ் ஆகிய படங்களில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.
சல்மான் கான் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் டைகர் 3 படத்தின் வெளியீட்டு தேதியை மாஸாக அறிவித்துள்ளார். இந்தியை தவிர தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டைகர் 3 வெளியிடப்படும் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி என சல்மான்கான் அறிவித்துள்ளார். சல்மான் கானின் பதிவில், “டைகர் 3-க்கு புதிய தேதி இதோ தீபாவளி 2023-ல் திரையரங்குகளில் காணலாம். #YRF50 உடன் #Tiger3 -ஐ கொண்டாடுங்கள்” என எழுதியுள்ளார்.
சல்மான் கான் இன்ஸ்டாகிராமில் படத்தின் போஸ்டரைப் (Tiger 3 First Look) பகிர்ந்துகொண்டு, “ஆ ரஹா ஹூன்! 2023 தீபாவளி அன்று #Tiger3. இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாகிறது” என்று எழுதியுள்ளார். ஏற்கனவே ஈகை திருநாள் பண்டிகையின் போது டைகர் 3 திரைப்படம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது மாற்றப்பட்டு, தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டைகர் 3 வெளியீட்டு தேதியை நடிகை காத்ரீனா கைப்பும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Latest Slideshows
-
Home Insurance : வாடகை வீடுகளுக்கும் காப்பீடு வீட்டு உரிமை எடுக்க முடியும்
-
Vijay Tv KPY Bala : 200 குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்த குக் வித் கோமாளி பாலா
-
Chandrayaan 3 New Update : உந்து விசைகலனை வெற்றிகரமாக இஸ்ரோ பூமி சுற்றுப் பாதைக்கு திருப்பியுள்ளது
-
தமிழ்நாடு முழுவதும் 47 Automatic Testing Stations அமைக்கப்படும்
-
Hi Nanna Movie Review : 'ஹாய் நான்னா' திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
MacKenzie Scott : முதல் பணக்காரப் பெண் என்ற அந்தஸ்தை பெறப் போகும் மக்கின்சி
-
இந்திய மகளிர் அணி கேப்டன் Harmanpreet Kaur தோனியை ஓரங்கட்டினார்
-
Actor Vijay Calls VMI Volunteers : புயலால் அவதிப்படும் மக்களை மீட்க நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
-
Wikipedia's Most Popular Articles Of 2023 : அதிகம் தேடப்பட்ட மற்றும் படிக்கப்பட்ட கட்டுரைகளை பகிர்ந்துள்ளது
-
Brian Lara : எனது சாதனைகளை இந்திய வீரர் கில் முறியடிப்பார்