TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது

டொனால்ட் டிரம்ப் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து, டிக்டாக் செயலி அமெரிக்காவில் அதன் சேவையை (TikTok App Is Back) மீண்டும் தொடங்கியுள்ளது. டிக்டாக் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியதில் 17 கோடி அமெரிக்க பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மீண்டும் செயலுக்கு வந்த "டிக்டாக்" (TikTok App Is Back)

டிக்டாக் செயலி மீதான அமெரிக்க அரசின் சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று டிக்டாக் செயலி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது அமெரிக்காவில் உள்ள 17 கோடி பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தடைக்கு திரையுலகம் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டிக்டாக் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள்ளாகவே டிக்டாக் சேவை (TikTok App Is Back) மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் வாக்குறுதியால் TikTok செயலி மீண்டும் செயல்பாட்டிற்கு வந்திருப்பது பயனர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி

டிக்டாக் தடை குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், டிக்டாக்கை இருட்டாக வைக்க வேண்டாம் என்று நிறுவனங்களை (TikTok App Is Back) கேட்டு கொள்கிறேன், சட்டத்தின் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன் நேரத்தை நீட்டிக்க திங்களன்று நான் ஒரு நிர்வாக உத்தரவை வெளியிடுவேன், இதனால் நமது தேசிய பாதுகாப்பை பாதுகாக்க ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும். தனது கூட்டு முயற்சியில் 50% வணிகத்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை பார்க்க விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி அமெரிக்க அதிபராக பதவியேற்கும் முதல் நாளிலேயே டிக்டாக் தடைக்கு எதிரான ஆவணத்தில் டிரம்ப் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்டாக் வெளியிட்ட அறிவிப்பு

டிரம்ப்பின் வாக்குறுதியைத் தொடர்ந்து TikTok செயலி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு TikTok வழங்கும் சேவை மற்றும் 7 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களை செழிக்க ஆதரவளிக்கும் எங்கள் சேவையைத் (TikTok App Is Back) தொடர தேவையான தெளிவையும் உத்தரவாதத்தையும் வழங்கிய அதிபர் டிரம்ப்பிற்கு நன்றி தெரிவிக்கிறோம். இது முதல் திருத்தத்திற்கான வலுவான நிலைப்பாடு மற்றும் தன்னிச்சையான தணிக்கைக்கு எதிரானது. TikTok-கை அமெரிக்காவில் வைத்திருக்கும் நீண்ட கால தீர்வில் அதிபர் டிரம்ப்புடன் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply