Tirunelveli Ezhuchiyum VOC 1908 : திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 புத்தக விமர்சனம்

ஏ.ஆர்.வெங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது (Tirunelveli Ezhuchiyum VOC 1908) வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நூலை பற்றி தற்போது காணலாம்.

வ.உ.சிதம்பரம்பிள்ளை

வ.உ.சிதம்பரம்பிள்ளை ஒரு இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். கிழக்கு இந்திய கப்பல்களுக்கு போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை (Tirunelveli Ezhuchiyum VOC 1908) தொடங்கினார். அவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல் வழி போக்குவரத்தை மேற்கொண்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். சுதந்திரப் போராட்ட வீரர், எழுத்தாளர், வழக்கறிஞர், தொழிற்சங்கத் தலைவர், சொற்பொழிவாளர் என பன்முக தன்மை கொண்டவர். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கம், நேர்மை மற்றும் ஆற்றல் நிறைந்தது. இவர் அன்பு, தைரியம், வெளிப்படைத் தன்மை ஆகிவற்றை உடையவராக இருந்தார்.

இவர் பல தமிழ் இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதியுள்ளார். மேலும் ஆங்கில புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டது மட்டுமின்றி மற்றவர்களையும் பங்கேற்க தூண்டினார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய அவர், அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களுக்கு வீர உரைகளை வழங்கினார். ஆங்கிலேய அரசால் தேச துரோகியாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புத்தகம் குறித்து (Tirunelveli Ezhuchiyum VOC 1908)

கடந்த மார்ச் 13, 1908 அன்று வ.உ.சி. கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்திய மக்கள் மீது ஆங்கிலேய அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுதந்திரப் போராட்டத்தின் போதோ அதற்கு முன்னரோ அல்லது பின்னரோ, தமிழகத்தில் இதுபோன்ற ஒரு எழுச்சி ஏற்பட்டதில்லை என்று நம்பப்படுகிறது. இந்த எழுச்சியின் போக்கை ஏராளமான சான்றுகளுடன் விவரிக்கும் வகையில் இந்நூல் (Tirunelveli Ezhuchiyum VOC 1908) வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த விஷயத்தில் வ.உ.சி எடுத்த நிலைப்பாட்டை விளக்குகிறது. மேலும் எழுச்சிக்கு பங்களித்த எண்ணற்ற சாதாரண மக்களின் கதையை மறுகட்டமைக்கிறது.

சாகித்ய அகாதமி விருது

அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் சாகித்ய அகாதமி விருது (Tirunelveli Ezhuchiyum VOC 1908) வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2024-ம் ஆண்டுக்கான விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908” ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply