Tirupathur Recruitment 2023 : திருப்பத்தூரில் ரூ.71,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

Tirupathur Recruitment 2023 : திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர், ரெக்கார்டு கிளார்க், இரவு காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை பயன்படுத்தி தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tirupathur Recruitment 2023 - மொத்த காலிப்பணியிட விவரம்

மொத்த காலிப்பணியிட விவரம் :

* அலுவலக உதவியாளர் – 11
* ஜீப் டிரைவர் – 09
* பதிவு எழுத்தர் – 02
* இரவு காவலாளி – 02

கல்வித் தகுதி :

* அலுவலக உதவியாளர் பதவி – 8 வகுப்பு தேர்ச்சி
* ஜீப் டிரைவர் – 8 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பதிவு எழுத்தர் – 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இரவு காவலாளி – எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு இருக்க வேண்டும்.

Tirupathur Recruitment 2023 - வயது வரம்பு

வயது வரம்பு :

*அனைத்து பதவிகளுக்கும் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கான விதிகளில் தளர்வுகள் அளிக்கப்படும்.

சம்பள விவரம் :

* அலுவலக உதவியாளர் – ரூ.15,700 – ரூ.58,100
* ஜீப் டிரைவர் – ரூ.19,500 – ரூ.71,900
* பதிவு எழுத்தர் – ரூ.15,900 – ரூ.58,500
* இரவு காவலாளி – ரூ.15,700 – ரூ.58,100

Tirupathur Recruitment 2023 - விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்கும் முறை :

  • தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tirupathur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுதிச் சான்றிதழ்களுடன் பதிவுத் தபாலில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/10/2023

Latest Slideshows

Leave a Reply