Tirupati Laddu: திருப்பதியில் லட்டு கொடுக்கும் முறை தொடங்கி இன்றுடன் 308 ஆண்டுகள் நிறைவு...

Tirupati Laddu :

இந்தியாவில் ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு பிரசாதம் கொடுக்கும் முறை சிறப்பான ஒன்றாகும். ஆனால் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான பிரசாதங்களிலும் முதன்மையானது Tirupati Laddu தான். ஆந்திரா சென்று வெங்கடாசலபதியை வணங்கி விட்டு திருப்பதி லட்டு வாங்கி சுவைக்கும் போது தான் அந்த பயணமே நிறைவேறும். நம் எல்லோரும் விரும்பி உண்ணும் Tirupati Laddu இன்றுடன் 308வது வயதில் கால் எடுத்து வைத்துள்ளது.

Tirupati Laddu - தனிச்சிறப்பு பெற்ற பிரசாதம் :

சர்க்கரை, நெய், மாவு, ஏலக்காய் மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை கொண்டு தனிச்சிறப்பு கொண்டு தயாரிக்கப்படும் பிரசாதம் தான் இந்த லட்டு. உலகிலேயே பணக்கார கடவுள் என்னும் சிறப்பு பெற்ற வெங்கடாசலபதியின் பிரசாதம் ஆகும். அவரை மனதார வணங்கி விட்டு அங்கு வழங்கப்படும் லட்டுக்கு நம் நாட்டில் உள்ள அனைவருமே அடிமைதான்.

Tirupati Laddu - 308 வது பிறந்தநாள் :

இந்த லட்டு வழங்கும் முறை திருப்பதியில் தொடங்கப்பட்டு இத்துடன் 308 ஆண்டுகள் நிறைவேற்றுள்ளன. இன்றளவும் தனிச்சிறப்பு கொண்டு வாங்கப்படும் இந்த லட்டுக்கு அதிக அளவு பக்தர்கள் உண்டு. முதலில் 1715 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இந்த லட்டு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பல கோடி மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

24 மணி நேரம் பிரசாதம் விற்பனை :

விசேஷ நேரங்களில் இந்த லட்டுக்கு அதிக அளவு தேவை ஏற்படுகின்றது. மற்ற நாட்களை விட ஏதாவது ஒரு நல்ல நாளில் மக்கள் அதிக அளவு இந்த கோவிலுக்கு செல்வார்கள். இதனால்தான் அங்குள்ள அதிகாரிகள் 24 மணி நேரமும் இந்த பிரசாதம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தனர். மக்கள் எவரும் இந்த கோவிலுக்கு வந்து லட்டு இல்லை என்று செல்லக்கூடாது என்ற ஒரே காரணத்தால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு முதல் ஏழு நாட்களில் சுமார் 1.8 மில்லியன் அளவு லட்டுகள் விற்பனையாகி முந்தைய சாதனைகள் அனைத்தையும் காலி செய்தது.

குறையாத சுவை :

லட்டு தயாரிக்கின்ற தொழிலாளர்கள் தானியங்கி மெஷின்களில் கிடைக்கும் கலவையில் லட்டுகளை தயாரித்து அந்தந்த கவுண்டர்களுக்கு அனுப்புவார்கள். இதனால் தான் பக்தர்கள் அனைவருக்கும் சுகாதாரமான மற்றும் சுவையான லட்டுக்களை வழங்க முடிகிறது. எவ்வளவு காலம் சென்றாலும் இந்த திருப்பதியில் லட்டுக்கு மட்டும் எப்போதும் மவுசு குறையாது.

Latest Slideshows

Leave a Reply