Tirupur Panchayat Leader Donated Free Bus : அரசுப் பள்ளிக்கு ரூ.16 லட்சத்தில் இலவசமாகப் பேருந்து

திருப்பூர் மாவட்டம் படியூர் ஊராட்சி மன்றத் தலைவரான ஜீவிதா சண்முகசுந்தரம் தனது சொந்த செலவில் படியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.16 லட்சத்தில் இலவசமாகப் பேருந்து (Tirupur Panchayat Leader Donated Free Bus) வழங்கியுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மற்றும் மாணவிகள் படியூரில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளுக்கு படியூர், ரோஸ் கார்டன், ஓட்டப்பாளையம், சிவகிரிபுதூர், பழனியப்பா நகர், காந்தி நகர், இந்திரா நகர், கோவில்மேடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர்.

இந்தப் பள்ளிகள் வழியே ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகள் இதனால் தினந்தோறும் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வருவதும், வீட்டுக்குச் செல்வதும் இயலாமல் தவித்து வந்தனர். ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு நடந்துதான் வருகின்றனர். மாலை வேலைகளில் தனியாக கிராமப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய மாணவிகள் தவிக்கும் சூழல் ஆனது இருந்தது. குறிப்பாக சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு மாணவிகள் வீட்டுக்குத் தனியாகச் செல்வதில் பல சிக்கல்கள் இருந்தன. கிராமப்புற மக்கள் கூடுதல் பேருந்து கோரி தொடர் மனுக்கள் அளித்து வந்தனர்.

இலவசமாகப் பேருந்து வழங்கிய உயர்ந்த உள்ளம் (Tirupur Panchayat Leader Donated Free Bus) - ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம் :

இந்த நிலையில் மாணவ, மாணவிகளின் கல்வி ஆனது எந்த விதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதற்காக தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.16 லட்சம் செலவு செய்து பள்ளிக்காக பேருந்து ஒன்றை வாங்கி (Tirupur Panchayat Leader Donated Free Bus) வழங்கியுள்ளார் ஜீவிதா சண்முகசுந்தரம். இந்தப் பேருந்து ஆனது பள்ளித் தலைமை ஆசிரியரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் இந்தப் பேருந்து ஆனது 14 கி.மீ. தூரம் இயக்கப்படுகிறது.

இதனால், பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்ட மாணவ, மாணவிகள் கல்விக்கு செய்யும் உதவி மற்ற அனைத்தையும் விட மேலானது என்று நிரூபித்திருக்கிறார் திருப்பூர் மாவட்டம் படியூர் ஊராட்சி மன்றத் தலைவரான ஜீவிதா சண்முகசுந்தரம். இதனால் படிக்க வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. GPS, கேமரா, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி என பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் இந்தப் பேருந்தில், முறையாக பின்பற்றப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுநர் மற்றும் மாணவர்களை ஏற்றி இறக்க உதவியாளர், எரிபொருள் என அனைத்து பராமரிப்பையும் ஜீவிதா சண்முகசுந்தரம் ஏற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply