TN 12th Exam 2025 : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்கும் நிலையில், பல்வேறு தலைவர்கள் மாணவர்களுக்கு (TN 12th Exam 2025) வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று தொடங்கும் பிளஸ் 2 பொதுத்தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

+2 பொதுத்தேர்வுகள் (TN 12th Exam 2025)

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று (03.03.2025) தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை சுமார் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை சரியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக (TN 12th Exam 2025) தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் 3 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும் நிலையில், மாணவர்கள் வினாத்தாளைப் படிக்க கூடுதலாக 10 நிமிடங்களும், தங்கள் விவரங்களைச் சரிபார்க்க 5 நிமிடங்களும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்கள் அடையாளச் சான்றிதழுடன் ஹால் டிக்கெட் நகலை எடுத்துச் செல்ல வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து

TN 12th Exam 2025 - Platform Tamil

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நேற்று இரவே தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது வாழ்த்துக்களைப் பதிவிட்ட தமிழ்நாடு (TN 12th Exam 2025) ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவர்கள் இரவில் நன்றாகத் தூங்கி, நிதானத்துடனும் நம்பிக்கையுடனும் தேர்வை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தியை பதிவிட்ட அவர், இந்த தேர்வுகள் மாணவர்களின் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு படிக்கட்டுகள் என்றும், ஆல் த பெஸ்ட் என வாழ்த்தியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், மாணவர்கள் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று அவர்களின் கனவுகள் நனவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், மாணவர்கள் கேள்விகளுக்கு எந்த பதட்டமும் இல்லாமல் எழுதுமாறும், படிக்கும் ஆர்வத்துடன் உடல்நலனிலும் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில், தம்பி, தங்கைகள் தேர்வுகளை துணிவுடன், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று வாழ்வில் உச்சம் அடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மாணவர்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply