TN CM MK Stalin's American Tour : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க சுற்றுப்பயணம்

TN CM MK Stalin's American Tour :

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 27 முதல் பதினைந்து நாட்கள் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை சுற்றுப்பயணம் (TN CM MK Stalin’s American Tour) மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை தங்கியிருப்பார். அமெரிக்கப் பயணத்தின் முதல் நாளான 28.08.2024 அன்று சான் பிரான்சிஸ்கோவில் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முக்கிய சந்திப்புகள் மற்றும் கூட்டங்களில் இருந்து பல முதலீட்டு ஒப்பந்தங்கள் ஆனது கையெழுத்தாகியுள்ளது.

முக்கிய முதலீட்டு ஒப்பந்தங்கள் - ஒரு குறிப்பு :

  • ரூ.450 கோடி முதலீடு செய்து நோக்கியா நிறுவனம் ஆனது 100 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
  • பேபால் ஆனது 1,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
  • Yield Engineering Systems ஆனது ரூ.150 கோடி முதலீடு செய்து, 300 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
  • மைக்ரோசிப் ஆனது ரூ.250 கோடி முதலீடு செய்து, 1,500 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.
  • இன்ஃபினக்ஸ் ஆனது ரூ.50 கோடி முதலீடு செய்து, 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கப் பயண விவரம் :

  • சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
  • சான் பிரான்சிஸ்கோவில் இருந்து செப்டம்பர் இரண்டாம் தேதி சிகாகோ செல்லும் அவர் செப்டம்பர் 11 வரை அங்கே தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கிறார். குறிப்பாக சிகாகோவில் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட உள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து, ஆகஸ்ட் 31 ஆம் தேதி புலம்பெயர்ந்த தமிழக மக்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
  • அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் ஆனது கையெழுத்தாக உள்ளன. பல்வேறு தொழிலதிபர்கள், சர்வதேச தமிழ் பிரபலங்கள் கலந்துகொள்ளும் ‘வணக்கம் அமெரிக்கா’ என்ற பெயரிலான அயலக தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் செப்டம்பர் 7 ஆம் தேதி பங்கேற்க உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 12 ஆம் தேதி புறப்பட்டு சென்னை திரும்ப உள்ளார்.

Latest Slideshows

Leave a Reply