TN Government Announcements Pongal Prizes : தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது

தமிழக அரசு 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுத்தொகை தொடர்பான (TN Government Announcements Pongal Prizes) அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பொது மக்கள் சிறப்பாக கொண்டாடிட மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் என அனைவருக்கும் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கிகளில் செலுத்த ஆலோசனை

பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் பணம் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதாவது பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவது தொடர்பாக ஆலோசனை (TN Government Announcements Pongal Prizes) செய்து வருகிறதாம். மேலும் நேரடியாக வங்கி கணக்கில் பொங்கல் பரிசு தொகையை செலுத்த வேண்டுமென்றால் குடும்ப தலைவரின் வங்கி கணக்கு எண், அவர்களின் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். ஒருவேளை அவர்களின் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு தொகையானது பயன் இல்லாமல் போகும். மேலும் இதுதொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு (TN Government Announcements Pongal Prizes)

ஒருவேளை பொங்கல் பரிசு தொகையை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தாமல் ரேஷன் கடை மூலமாக வழங்கும் பட்சத்தில் பரிசுக்கான டோக்கன் (TN Government Announcements Pongal Prizes) டிசம்பர் 20-ம் தேதி முதல் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் 2023-ம் ஆண்டு சில மாற்றம் செய்து கரும்பு, சர்க்கரை பச்சரிசி உள்ளிட்ட பொருட்களுடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. மேலும் வரும் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

அனைவருக்கும் வழங்கப்படும்

இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள், அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் என அனைவருக்கும் வழங்கப்படும் (TN Government Announcements Pongal Prizes) எனவும், இதற்காக ரூ.240 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு ரேஷன் அட்டைக்கு ஒன்று என்ற விகிதத்தில் டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நாளில் சென்று பரிசு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Reply