TN Govt Bear Travel Expenses For Abroad Studies : தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் ஒரு முன்னோடி திட்டம்

தமிழ்நாடு அரசு கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்து வருகிறது :

சமீபத்தில் (02.08.2024-ல்) சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மாணவ, மாணவிகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழக முதல்வர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் முதலமைச்சர் TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறையில் தேர்வான 448 பேர்களில், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

TN Govt Bear Travel Expenses For Abroad Studies - தமிழக முதல்வர் விழாவில் பேசிய குறிப்பு :

இந்தியாவிலேயே உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் நம்பர் 1 இடத்தை தமிழ்நாடுதான் பெற்றுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

  • தமிழ்நாடு அரசு கல்வி கற்பிக்கும் முறையை நவீனமாக்கியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆனது “நான் முதல்வன்” இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இன்று தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழ்நாடு அரசின் திட்டமிட்ட சிறந்த செயல்பாடுகளால் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில செல்கின்றனர்.
  • கடந்த 2022-ம் ஆண்டில் 75 அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்கச் சென்றுள்ளார்கள். 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஆனது 274 மாணவர்களாகவும்  மற்றும் இந்த 2024-ம் ஆண்டில் 447 மாணவர்களாகவும் உயர்ந்துள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை  எண்ணிக்கை ஆனது 17% ஆக அதிகரித்துள்ளது.
  • உயர்கல்வியில் புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக மாணவிகள் சேர்க்கை ஆனது 34% ஆக உயர்ந்துள்ளது. முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு  இந்த 2024-ம் ஆண்டில் 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் செல்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது.
  • தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளனர்.
  • தற்போது தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக உள்ளனர். தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் வாய்ப்பு கிடைத்தால் எதையும் சாதிப்பார்கள்.  இனி விண்வெளியில் கூட அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
  • தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் இருந்து சென்னை, பெங்களூரு, உ.பி, மலேசியா மற்றும் தைவானில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு படிக்க செல்லும் 447 மாணவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
  • தைவான், மலேசியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் 14 தமிழ்நாட்டு மாணவர்கள் முழு இலவச கல்வி வாய்ப்பை பெற்றுள்ளனர். கல்வி பயில சிறந்த பல்கலைக்கழகங்களில் ஸ்காலர்ஷிப் பெற்றுள்ள இந்த 14 மாணவர்களின் வெளிநாடு செல்லும் முதல் பயணச் செலவை (TN Govt Bear Travel Expenses For Abroad Studies) தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் இனி அனைத்துத் துறைகளிலும் சாதனை படைப்பார்கள் என்று முதலமைச்சர் கூறினார்.

Latest Slideshows

Leave a Reply