TN Govt Best Transgender Award : சந்தியா தேவி தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது பெற்றார்

தமிழக அரசு ஆனது ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கி வருகிறது. இந்த விருது ஆனது கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் சமூக நலத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சந்தியாதேவி தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருதை (TN Govt Best Transgender Award) பெற்றுள்ளார். சந்தியா தேவியோட சொந்த ஊர் நாகர்கோவில் பக்கத்தில் உள்ள ஒழுகினசேரி ஆகும். சந்தியா தேவி ஒழுகினசேரியிலிருந்து தோவாளை வந்து அங்கேயே இப்ப வாழ்ந்து கொண்டு வருகிறார்.

TN Govt Best Transgender Award - சந்தியாதேவி விருது வாங்கியது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் :

சந்தியாதேவி தனக்கு பிடித்த வில்லுப்பாட்டு கலையை கத்துக்க ஆசைப்பட்டு கேள்வி ஞானம் மூலமாவே கத்துக் கொண்டார். திருவோணம் அன்னைக்கு நாகர்கோவிலில் உள்ள வடசேரி ஊருலதான் தனது பதினெட்டு வயசில முதன்முறையா வில்லுப்பாட்டு பாடினார். ஆனால் இந்த முதல் வாய்ப்பு சுலபமாக கிடைக்கவில்லை.  சந்தியாதேவியின் குடும்பமும், திருநங்கை சமூகமும் சந்தியாதேவிக்கு உறுதுணையாக இருந்தன. பலருக்கும் சந்தியாதேவி மேல நம்பிக்கை இல்ல. ஆனால், சந்தியாதேவி பாடி முடிச்சதும் அவங்களே உணர்ந்து வாயாற பாராட்டிச் சென்றார்கள்.    

சந்தியாதேவி நிறைய கஷ்டங்கள் அனுபவித்து உள்ளார். கோயிலில் ஆணாக இருந்து பாடுறதுக்கும், பெண்ணாக இருந்து பாடுறதுக்கும் மற்றும் திருநங்கையாக இருந்து பாடுறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் ஆனது உள்ளது. கோயில்களில் திருநங்கைகளுக்கு ஏன் பாட வாய்ப்பு கொடுக்குறீங்கன்னு பலர் கேட்பாங்க. தயக்கத்தோடதான் பாட வாய்ப்பு கொடுப்பாங்க. ஆனால், சந்தியாதேவி பாடி முடிச்சதும் அவங்களே உணர்ந்து விருப்பப்பட்டு அடுத்து வரவிருக்கும் கொடைக்கான அட்வான்ஸையும் சேர்த்து கொடுப்பார்கள்.

சந்தியாதேவி இதுவரைக்கும் அடுத்து வரவிருக்கும் கொடைக்கும் சேர்த்து தான் அட்வான்ஸை வாங்கிக் கொண்டு வந்துள்ளார். சந்தியாதேவி கடந்த நாலு வருஷமா இந்த விருதுக்கு ட்ரை பண்ணிக் கொண்டு இருந்தார். இப்பதான் இவருக்கு இந்த விருது ஆனது கிடைத்துள்ளது. நிறைய கஷ்டங்கள் அனுபவிச்ச பின்புதான் இவருக்கு இந்த விருது ஆனது கிடைத்துள்ளது. தன்னை விட மிகப்பெரிய திருநங்கைகள் மற்றும் அனுபவசாலிகள் எல்லாம் இருந்தபோதும் தனக்கு இந்த விருது (TN Govt Best Transgender Award) கிடைத்துள்ளது சந்தியாதேவிக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. 

சந்தியாதேவி வாழ்க்கை குறிப்பு :

கோயில் திருவிழாக்கள் ஆறு மாசம் நடக்கும்போது வில்லுப்பாட்டு வாய்ப்பு இருக்கும், அதன்பின்பு வாய்ப்பு இருக்காது. அதனால கச்சேரி இல்லாத நாட்களில் சந்தியாதேவி தனது பூக்கடையில் பூக்கட்டி வித்து வியாபாரம் பண்ணுகிறார். தனக்கு தெரிஞ்ச பாவப்பட்ட குடும்பத்துல உள்ள ஒரு பையனுக்கு படிப்பு செலவுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார். மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டு வருகிறார். வில்லுப்பாட்டு அழியக் கூடாதுன்னு அது சார்ந்தும் மற்றும் சமூக அக்கறையான கருத்துகளையும் கதையாக ரெடி பண்ணி தனது 8 பேர் குழுவுடன் பாடிட்டு வருகிறார்.

சுயேட்சையா போட்டியிட்டு தோவாளை நான்காவது வார்டு உறுப்பினர் ஆக வெற்றி பெற்று சமூக மக்களுக்கு தன்னால முடிஞ்ச உதவிகள் பண்ணிக் கொண்டு இருக்கிறார். தனது வருமானம் குறைவுதான் என்றாலும் ஒரு முதியோர் இல்லமும் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளியும் அமைக்க வேண்டும் என்பது சந்தியாதேவியின் மிகப்பெரிய ஆசை ஆகும். அதுக்கு தேவையான அந்தத் தொகையை சேகரித்து வருகிறார். சந்தியாதேவி விரைவிலேயே அந்த ஆசையை  நிறைவேற்ற விரும்புகிறார்.

Latest Slideshows

Leave a Reply