TN Govt Giving Patta For Poramboke Lands : 5 வருடம் புறம்போக்கு இடத்தில் வசித்தால் அரசு பட்டா வழங்க பெயிரா கோரிக்கை

ஆட்சேபமற்ற புறம்போக்கு இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க நிர்ணயிக்கப்பட்ட (TN Govt Giving Patta For Poramboke Lands) காலக்கெடுவினை 5 ஆண்டுகளாக குறைத்திட வேண்டும் என்றும், ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தினை விரைவில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பெயிரா Federation of All India Real Estate Association (FAIRA) கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் திரு. ஆ.ஹென்றி அவர்கள் தமிழகம் முழுவதும் ஆட்சேபமற்ற மற்றும் ஆட்சேபனைக்குரிய அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்களின் நலன் கருதி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலம் (TN Govt Giving Patta For Poramboke Lands)

இந்த கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் கடந்த 20-02-2025 அன்று சென்னை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாங்கள் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்த ஆட்சேபமற்ற புறம்போக்கு இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பொதுமக்களுக்கு தகுதியின் அடிப்படையில் பட்டா (TN Govt Giving Patta For Poramboke Lands) வழங்கும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தமிழக அரசு சார்பில் தாங்கள் தெரிவித்த உறுதியான செய்தியை  ஊடகத்தின் வாயிலாக நாங்கள் அறிந்தோம். எளிய மக்களுக்கான இந்த மகத்தான திட்டத்தை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக வரவேற்று அரசுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இந்நேரத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அரசாணை எண் 465, நாள் 27.11.2018-ம் ஆண்டு 2018-2019-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நீர்நிலைகள் மற்றும் சாலைகள் உள்ளிட்ட புறம்போக்கு இடங்களை மீட்டெடுக்கும் பொருட்டு இதில் 5 ஆண்டுகளுக்கு (TN Govt Giving Patta For Poramboke Lands) மேலாக வசித்து வரும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு அதே பகுதியில் உள்ள ஆட்சேபனையற்ற மாற்று புறம்போக்கு நிலங்களை தேர்வு செய்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் எனவும், நடைமுறையில் உள்ள அரசு திட்டத்தின்படி புதிதாக குடியிருப்பு கட்டி தரப்படும் என மேற்கண்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

காலக்கெடு குறைக்க வேண்டும்

TN Govt Giving Patta For Poramboke Lands - Platform Tamil

எனவே மேற்கண்ட அரசாணை எண் 465-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துகளை கனிவுடன் பரிசீலித்து தாங்கள் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் (TN Govt Giving Patta For Poramboke Lands) பொதுமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவினை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில்  வீடு கட்டி குடியிருக்கும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் மாற்று வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தினை விரைவில் அமல்படுத்த வேண்டும் என வருவாய்த்துறை முதன்மைச் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Latest Slideshows

Leave a Reply