TN Home Guard Recruitment 2024 : சென்னையில் ஊர்க்காவல் படையில் காலிப்பணியிடங்கள்

TN Home Guard Recruitment 2024 :

சென்னை பெருநகர ஊர்க்காவல் படை என்பது இந்தியக் காவல் துறைக்கு துணையாக செயல்படும் ஒரு தன்னார்வ படையாகும். சென்னையின் பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய (TN Home Guard Recruitment 2024) ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆனது வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 22/01/2024 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் ஆனது வரவேற்கப்படுகின்றன. 22/01/2024 காலை முதல் 10/02/2024 மாலை 05.00 மணி வரை (TN Home Guard Recruitment 2024) விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

  • சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • கல்வித்தகுதி ஆனது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தவறியவர்கள்
  • நன்னடத்தை உள்ளவர்களாக மற்றும் குற்றப்பின்னணி இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
  • சென்னை பெருநகர காவலின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்
  • குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும்.

தேர்ச்சி செய்யப்படும் முறை

  • தேர்ச்சி பெறும் ஊர்க்காவல் படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.
  • பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அவர்கள் அனுப்பப்படுவர்.
  • சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை தேர்ச்சி பெறும் ஊர்க்காவல் படையினர்களுக்கு வழங்கப்படும்.
  • இரவு ரோந்து பணி, பகல் ரோந்து பணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/- வழங்கப்படும்/பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே.
  • சிறப்பாக மெச்சத்தகுந்த வகையில் பணிபுரிந்த ஊர்க்காவல் படையினர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (TN Home Guard Recruitment 2024) விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 22.01.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்தி செய்து 10.02.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

முகவரி

சென்னை பெருநகர ஊர்க்காவல்படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
சைதாப்பேட்டை, சென்னை – 15
தொடர்பு எண்: 9498135190/9566776222

சேவை மனம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் யாவரும் ஊர்க்காவல்படையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்யலாம்.

Latest Slideshows

Leave a Reply