TN Immediate Building Approval 2024 : சுயசான்றிதழ் முறையில் 3,500 Sq.ft வரை கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் திட்டம்
தமிழகத்தில் கட்டிடத்தின் நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் முறையை அமல்படுத்திய தமிழக அரசு, தற்போது 3,500 சதுர அடி வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு சுயசான்றிதழ் முறையில் உடனடியாக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை (TN Immediate Building Approval 2024) வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ரியல் எஸ்டேட் தொழில் செய்வோருக்கு மற்றும் வீடு கட்டுவோருக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் அவர்கள் வெளியிட்டு வருகிறார். குறிப்பாக பட்டா மற்றும் பத்திரப்பதிவு போன்ற விஷயங்களில் கையூட்டு பெறுவதை தவிர்க்க பல்வேறு நடைமுறைகளை மாற்றி அறிவித்துள்ளார். இதனால் லஞ்சம் வழங்காமல் பட்டா வாங்குவதும், பத்திரம் பதிப்பதும் சாத்தியமாகி வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் பத்திரப்பதிவு துறை மற்றும் வருவாய்துறை, ரியல் எஸ்டேட் துறை போன்ற துறை சம்பந்தமாக முதல்வர் அவருக்கு பல்வேறு வகையான புகார்கள் வந்தன. அதிலும் குறிப்பாக பட்டா மாறுதல் விண்ணப்பம் மற்றும் வீடு கட்டுவதற்கான அனுமதி தொடர்பாக ஏராளமான புகார்கள் மற்றும் கோரிக்கைகள் முதல்வரின் தனிப்பிரிவுக்கே வந்தன. இது சம்மந்தமாக தமிழக முதல்வர் அவர்கள் பத்திரம் பதிவு செய்தவுடன் அவர்களுக்கு தானாகவே பட்டா தரும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட நிலத்தை அப்படியே எந்த உட்பிரிவுகளும் இல்லாமல், எந்த ஒரு சிக்கலும் இல்லாத இடம் என்றால் அந்த இடத்திற்கு உடனடியாக பட்டா வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரப்போகிறது (TN Immediate Building Approval 2024) என முதல்வர் அறிவித்துள்ளார்.
கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் திட்டம் :
- தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு உள்ள கட்டிட அளவுகளுக்கு இனிமேல் கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதாவது 14 மீட்டர் (46 அடி) உயரம் வரை மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு மற்றும் 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
TN Immediate Building Approval 2024 - சுயசான்றிதழ் முறையில் உடனடி அனுமதி வழங்கும் திட்டம் :
கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கு அதிக லஞ்சம் மற்றும் காலதாமதம் என மக்கள் பல சிக்கல்களை சந்திப்பதால் 2 ஆயிரத்து 500 சதுரடி வரை உள்ள இடங்களுக்கு அதிகபட்சமாக 3,500 சதுரடி வரையும் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை கட்டப்படும் கட்டிடங்களுக்கு அவர்கள் வழங்கும் சுய சான்றிதழ் அடிப்படையில் உடனடியாக கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை (TN Immediate Building Approval 2024) வரும் 2024 ஆகஸ்ட் மாதம் முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் மூலம் பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான மனையின் சுய விவரங்கள், கட்டிட பரப்பளவு, உயரம், உரிமை ஆவணங்கள், சாலையின் அகலங்கள் போன்ற விவரங்களுடன் சுய சான்றிதழ் இணைத்து இணையதளத்தில் விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இதற்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய உடன் கட்டிட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சுய சான்றிதழ் மூலம் கட்டிட வரைப்பட அனுமதி வழங்கும் இந்த திட்டம் புதிதாக வீடு கட்டுபவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளிலும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இப்புதிய திட்டம் பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது ஒருவர் எற்கனவே 1,200 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டி இருந்தால் அவர்கள் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டிடம் கட்டுவதற்கு சுயசான்றிதழ் முறையில் அனுமதி பெறமுடியும் (TN Immediate Building Approval 2024) என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Latest Slideshows
-
Peaches Fruit Benefits In Tamil : பிச்சிஸ் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
-
Artificial Blood : மருத்துவ உலகில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் செயற்கை ரத்தம்
-
Shubhanshu Shukla Return : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்
-
TN Village Assistant Recruitment 2025 : தமிழகத்தில் 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது
-
Gingee Fort Declared A World Heritage : செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது
-
Comet AI Browser : கூகுளுக்கு போட்டியாக கமெட் ஏஐ பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
-
Freedom Review : சசிகுமார் நடித்துள்ள ஃப்ரீடம் படத்தின் திரை விமர்சனம்
-
Amazon Prime Day Sale 2025 : அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் டே சேல் விற்பனையை அறிவித்துள்ளது
-
Bitchat App : இணையதளம் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்ப பிட்சாட் செயலி அறிமுகம்
-
Apollo Hospitals Success Story : இந்தியாவின் முதல் பெருநிறுவன மருத்துவமனை அப்பல்லோவின் வெற்றிப் பயணம்