TN Medical College : தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதியதாக 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க உள்ளதாக (TN Medical College) அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகள்

கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அவை அனைத்தும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இதன் மூலம், தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 74 மருத்துவக் கல்லூரிகள் (TN Medical College)  உள்ளன. அதில் 35 அரசு மருத்துவ கல்லூரிகள், 2 மத்திய பல்கலைக்கழகங்கள், 24 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 1 எய்ம்ஸ், 12 நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகியவை அடங்கும். இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

6 புதிய மருத்துவக் கல்லூரிகள் (TN Medical College)

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் (TN Medical College)  அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் அமைச்சர் அளித்த தகவலின்படி, புதிய மருத்துவமனைகளுக்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த சூழலில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்டுள்ள 6 மாவட்டங்களில் புதிய அரசு கல்லூரிருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், மக்கள் அனைவரும் உயர்தர சிகிச்சையை பெறுவார்கள். கூடுதலாக, மருத்துவப் படிப்புக்கான எண்ணிக்கை குறைந்தபட்சம் 300 இடங்கள் (TN Medical College) அதிகரிக்கும். இதன் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியை பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

TN Medical College - Platform Tamil

25 ஏக்கர் நிலம்

அரசு மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு 25 ஏக்கர் நிலம் தயாராக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் இடம் தேர்வு செய்தல் மற்றும் தேவையான நிலத்தை கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. எல்லாவற்றையும் தயார் செய்த பிறகு, தேசிய மருத்துவ ஆணையத்திடம் விண்ணப்பம் செய்யப்படும் (TN Medical College)  என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம், தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரினார்.

Latest Slideshows

Leave a Reply