TN PWD Recruitment : தமிழக பொதுப்பணித்துறையில் 760 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறையில் (Public Works Department) காலியாக உள்ள பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
TN PWD Recruitment
1. காலியிடங்களின் எண்ணிக்கை (Total Vacancy)
பொதுப்பணித்துறையில் இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி (Educational Qualification)
இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு (TN PWD Recruitment) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது அதற்கு நிகரான டெக்னாலஜி பாடப்பிரிவு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. வயது தகுதி (Age)
பொதுப்பணித்துறையில் இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு 21 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
4. சம்பளம் (Salary Process)
பொதுப்பணித்துறையில் (TN PWD Recruitment) இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியுடன் மாதம் ரூ.9000 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification) அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பானது வரும் 21.01.2025 முதல் 24.01.2025 அன்று வரை நடைபெறுகிறது.
6. விண்ணப்பிக்க கடைசித் தேதி (Last Date)
பொதுப்பணித்துறையில் இந்த பட்டதாரி பயிற்சி (Graduate Technician Apprentice) பணியிடங்களுக்கு (TN PWD Recruitment) விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25.11.2024 முதல் 31.12.2024 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
7. மேலும் விவரங்களுக்கு
http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Latest Slideshows
-
TikTok App Is Back : டிக்டாக் செயலி மீண்டும் செயலுக்கு வந்தது
-
Champions Trophy 2025 : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
-
Vikram Tamil Remake Of Margo : மார்கோ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கும் சியான் விக்ரம்
-
CLRI Recruitment 2025 : மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 காலிப்பணியிடங்கள் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
-
OnePlus 13 & 13R Phone Replacement : ஒன்பிளஸ் 13 & 13R போன்களுக்கு ரிப்ளேஸ்மெண்ட் திட்டம்
-
2024-25 GDP Growth Down : 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது
-
Pongal Festival 2025 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & கொண்டாட்டமும்
-
Game Changer Review : கேம் சேஞ்சர் திரைப்படத்தின் திரை விமர்சனம்
-
Retro Release Date Announced : சூர்யா நடிக்கும் ரெட்ரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
-
Open Secret CEO : அஹானா கௌதமின் வெற்றிப் பயணம்