TN Rain Updates : தென் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் டிசம்பர் 17 கனமழை வெள்ளத்தில் மூழ்கின

TN Rain Updates - IMD வானிலை முன்னறிவிப்பு :

தென் தமிழகத்தின் (TN Rain Updates) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 17 கனமழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை தமிழகம், கேரளாவில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை (TN Rain Updates) விடுத்துள்ளது. கொமோரின் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு சூறாவளி சுழற்சி நிலைமையை மோசமாக்குகிறது.

TN Rain Updates : நள்ளிரவு 1.30 மணி வரையிலான 15 மணி நேரத்தில் 60 செ.மீ மழை ஆனது தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பெய்துள்ளது. 26 செ.மீ மழை ஆனது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையிலும் மற்றும் 17.3 செ.மீ மழை ஆனது கன்னியாகுமரியிலும் பதிவாகியுள்ளது. வரலாறு காணாத மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கு நிவாரண நடவடிக்கைகள் :

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்தையும் கண்காணிக்க ஒரு மூத்த அதிகாரி நியமித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மையங்கள் மற்றும் படகுகளை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேவைப்பட்டால் மக்களை முன்கூட்டியே வெளியேற்றவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியுள்ளார். தலா 50 பேர் கொண்ட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை (N.T.R.F) குழுக்கள் ஆனது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று மாநில பேரிடர் மீட்புப் படை (S.DR.F) குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதுகாப்புப் பணியில் 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காற்றின் வேகம் 40 – 55 கிமீ என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலிக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் உட்பட 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் தூத்துக்குடி செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று 18/12/2023 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாபநாசம், பெருஞ்சாணி, பேச்சுப்பாறை அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், முழங்கால் முதல் இடுப்பு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து அணைகளில் நீர் மேலாண்மையை முறையாக மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில கட்டுப்பாட்டு அறை 1070 மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை 1077 ஐ மக்கள் உடனடி உதவிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ஆனது ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, வருவாய், தீயணைப்பு, டாங்கட்கோ மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை நிவாரணத் துறைகளின் அதிகாரிகள் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தயார் நிலையில் 843 நிவாரண முகாம்கள் உள்ளதாலும், அடிப்படைத் தேவைகள் இருப்பதாலும் தங்குமிடம் தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை.

Latest Slideshows

Leave a Reply