TN RERA Chairman : தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TN RERA Chairman) புதிய தலைவராக மற்றும் தலைமைச் செயலாளராக திரு.சிவ்தாஸ் மீனாவை தமிழக அரசு நியமித்துள்ளது. சிவ்தாஸ் மீனாவுக்கு பதிலாக முதல்வரின் தலைமைச் செயலாளராக என்.முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார். TN RERA-வின் தலைவர் திரு.கே.ஞானதேசிகன் பதவிக்காலம் கடந்த 2024 பிப்ரவரி 10 ஆம் தேதி உடன் முடிவடைந்தது. 

TN RERA Chairman - சிவ்தாஸ் மீனா நியமனம் :

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிடப்பட்ட அறிவிப்பில் RERA-வின் தலைவர் பதவிக்கு தகுதியானவர்களை நியமனம் செய்ய தேர்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. தேர்வுக் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் கவனமாக ஆய்வு செய்த பிறகு திரு.சிவ்தாஸ் மீனாவை TN RERA-வின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரு.சிவ்தாஸ் மீனா ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் அல்லது 65 வயது வரை TN RERA-வின் தலைவராக பதவி வகிப்பார். கடந்த மூன்று சாதப்தங்களாக பணிபுரிந்த திரு.சிவ்தாஸ் மீனா நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை முன்னின்று நடத்துவதற்கு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினால் நேரடியாக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின் 49-வது தலைமை செயலாளர் :

  • ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திரு.சிவ்தாஸ் மீனா 5.10.1964 அன்று பிறந்தார். என்ஜினியரிங் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவரான சிவ்தாஸ் மீனாவிற்கு ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய நான்கு மொழிகள் தெரியும். மேலும் அவர் ஜப்பான் மொழியையும் அவர் கற்றுள்ளார்.
  • 1989 ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக திரு.சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார். முதலில் காஞ்சிபுரம் மாவட்ட உதவி கலெக்டராக பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா கோவில்பட்டி உதவிக் கலெக்டர், வேலூர் கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட கலெக்டர் என அடுத்தடுத்து பல பொறுப்புகளை வகித்தார்.
  • தமிழக முதல்வர் ஆட்சியில் பல நெருக்கடிகளை சமாளித்து சிறப்பாக பணியாற்றக் கூடியவராகவும் அறியப்படும் சிவ்தாஸ் மீனா கடந்த 2023 ஜூன் வி.இறையன்புக்கு பிறகு தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TN RERA Chairman) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply