உதயநிதி ஸ்டாலின் TN-RISE நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்தார்

தமிழ்நாட்டில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் மற்றும் பெண்களுக்கு உதவவும் தமிழ்நாடு அரசு தரப்பில் TN-RISE என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் வளர நினைக்கும் பெண்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டிலும் அரசு தரப்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழ்நாடு அரசு TN-RISE என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் வளர நினைக்கும் பெண் தொழில் முனைவோர்கள் நிதி, சந்தைகள், தொழில் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை எளிதாக பெறுவதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் TN-RISE :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில், “ஸ்டார்ட் அப் மகளிர் தொழில் முனைவோர்கள் தொழில் சம்பந்தப்பட்ட நிதி சந்தைகள் மற்றும் தொழில் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கென பிரத்யேகத் தொழில் இயக்கம் ஒன்றை தமிழ்நாடு அரசு உருவாக்கும் எனவும், அந்த இயக்கம் மேம்பட்ட உதவிகளை வழங்கும்” எனவும் அறிவித்திருந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூலை 2 ஆம் தேதி TN-RISE தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த திட்டதிற்காக www.tnrise.co.in என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த TN-RISE அலுவலகம் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் கலைநயத்துடன் மகளிர் தொழில் முனைவோருக்கு தேவையான பிரத்யேக வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஆனது தற்போதுள்ள தொழில் காப்பு மையங்களை (Business Incubation Centers) எளிதில் அணுக இயலாத ஊரக, நகர்ப்புர மகளிர் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உயர் நிலை சேவைகளை வழங்கும். இதன்மூலம் மாநிலத்தின் தொழில் வணிக சூழலில் மகளிர் தொழில் முனைவோருக்கும், மற்ற தொழில் முனைவோருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் இந்த மையம் ஆனது செயல்படும்.

ஒவ்வொரு ஆண்டும் நூறுக்கணக்கான மகளிர் தொழில் முனைவோர் மற்றும் மகளிர் தொழில் குழுக்கள் இந்த மையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பயன்பெறுவார்கள். இத்தகைய ஸ்டார்ட் அப் துறையில் தொழில் முனைவோருக்கு வழிகாட்டவும் மற்றும் தேவையான சேவைகளை வழங்கவும் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அளவில் பிரசித்தி பெற்ற Flipkart, HP, SICCI, StartupTN மற்றும் பல நிறுவனங்களுடன் TN-RISE நிறுவனம் ஆனது புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டார்ட் அப் துறையில் பெண்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும்.

Latest Slideshows

Leave a Reply