TN Road Development Projects : தமிழக மாநிலத்தின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த வரும் நல்ல திட்டங்கள்

அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்துள்ள சாலை மேம்பாட்டு திட்டங்கள்,

  • கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் Rs.1000 கோடி மதிப்பீட்டில் 2000 கி.மீ சாலைப்பணிகள் செயல்படுத்தப்படும்.
  • மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ரூ.300 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரூ.500 கோடி நிதி ஆனது சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரூ.300 கோடி நிதி ஆனது சென்னையில் உள்ள சாலைகளை விரிவுபடுத்த ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரூ.1000 கோடி நிதி ஆனது வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும்.
  • சென்னையில் உள்ள அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் 18 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை அகலப்படுத்தப்படும்.
  • ரூ.365 கோடி நிதி ஆனது 2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்படும்.
  • மாநகராட்சியை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள ரூ.300 கோடி நிதி ஆனது ஒதுக்கீடு செய்யப்படும்.
  • ரூ.100 கோடி நிதி ஆனது பெசண்ட் நகர், கோவளம், எண்ணூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்படும்.

TN Road Development Projects - இந்த 2024-ஆம் வருடம் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் முக்கிய சாலைத் திட்டங்கள் :

  • சிவகாசிக்கு வெளிவட்ட சாலை
  • மன்னார்குடிக்கு ரிங் ரோடு
  • திண்டுக்கல்லுக்கு பைபாஸ்
  • திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் இடையே உயர்மட்ட பாலம்
  • அவினாசி மேட்டுப்பாளையம் ரோடு நான்கு வழிச்சாலை
  • விழுப்புரத்தில் கோரையாற்றின் குறுக்கே பாலம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

மன்னார்குடி ரிங் ரோடு :

TN Road Development Projects : ரிங்ரோடு ஆனது மன்னார்குடியைச் சுற்றி 22 கி.மீ.க்கு அமைக்கப்படும். இந்த மன்னார்குடி ரிங் ரோடு ஆனது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சில கிராம சாலைகளைத் தவிர மூன்று மாநில நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது இந்த ரிங் ரோடு ஆனது  கும்பகோணம்-மன்னார்குடி-அதிராம்பட்டினம் சாலைகளை இணைக்கும். தமிழ்நாட்டில் தற்போது ரிங் ரோடு அமைக்கப்படும் மிக சிறிய நகரமாக மன்னார்குடி மாறி உள்ளது. இந்த ரிங் ரோடுடன் கிராமப்புற சாலைகளை இணைப்பதன் மூலம் விவசாய விளைபொருட்களை அருகில் உள்ள நகரங்களுக்கு மிக எளிதாக கொண்டு செல்ல முடியும். இந்த ரிங் ரோடு மன்னார்குடியில் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்கும்.

Latest Slideshows

Leave a Reply