TN Shooter Qualified For The Olympics : தமிழகத்தை சேர்ந்த Shooter Prithviraj Tondaiman ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்

TN Shooter Qualified For The Olympics :

தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவிப்பு :

பாரிஸில் வரும் 2024 July மாதம் நடைப்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் பணி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டியில் Short Gun பிரிவுக்கு தகுதி (TN Shooter Qualified For The Olympics) பெற்று இருக்கிறார். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிருத்வி ராஜ் தொண்டைமான் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிருத்வி ராஜ் தொண்டைமான் தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி ஆனது பிரான்ஸ் செல்ல இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி :

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் 26-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியாவிற்கு கட்டாயம் தங்கப்பதக்கம் பெற்று தருவேன் என தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் (TN Shooter Qualified For The Olympics) நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரித்வி ராஜ் தொண்டைமான் இது குறித்து பேசும்பொழுது, “ஒலிம்பிக்கில் கலந்து கொள்வது தனது நீண்டநாள் கனவு என்றும் கடந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள, நான் நினைத்தது கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்ததால் நிறைவேறவில்லை. அதனால் 4 வருடமாக கடுமையாக பயிற்சி எடுத்து இந்த முறை தேர்வு பெற்று உள்ளதாகவும், இந்த முறை கண்டிப்பாக பரிசு பெறுவேன்” என்று கூறினார். மேலும் அவர், “தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் மற்றும் திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால்  துப்பாக்கி சுடுதலுக்கான பயிற்சிக்களம் தமிழ்நாட்டில் இல்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “வெவ்வேறு பிரிவில் விளையாட இந்தியாவில் இருந்து ஐந்து பேரும் தேர்வாகியுள்ளோம். எனது பிரிவில் ராஜேஸ் குமாரி என்பவரும் தேர்வாகி உள்ளார். இத்தாலியில் நாங்கள் அனைவரும் ஒலிம்பிக்கிற்கான பயிற்சியை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளோம். நாங்கள் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் 10 நாட்களுக்கு முன்பாக பாரிஸிற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறோம். நான் இந்த ஒலிம்பிக் போட்டியில் 30 வீரர்களை எதிர்கொள்ள போகிறேன். 30 வீரர்களும் மிகவும் சிறந்த விளையாட்டை நிரூபிக்கக்கூடியவர்கள். அவர்களுக்கு இணையாக நான் போட்டி போட்டு கட்டாயம் என் ஒலிம்பிக் கனவை நெனவாக்குவேன்” என்று கூறினார். மேலும் அவர், “இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்க பதக்கம் பெற்று தரமுடியும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Latest Slideshows

Leave a Reply