TN Will Not Implement CAA : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

TN Will Not Implement CAA - Chief Minister M.K.Stalin's Announcement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT) ஆனது இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் இந்த சட்டம் (TN Will Not Implement CAA) நடைமுறைப்படுத்தப்படாது என்று அதிரடியாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 12.03.2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை :

பாஜக அரசு ஆனது 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வரும் CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA – Citizenship Amendment Act) நடைமுறைப்படுத்த அவசர கதியில் ஒரு அறிக்கை ஒன்றினை பாஜக அரசு ஆனது வெளியிட்டுள்ளது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் பன்முகத் தன்மைக்கு எதிரானது :

இந்த CAA சட்டம் ஆனது இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல, இந்த CAA சட்டம் ஆனது பல்வேறு வகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் நலனிற்கும் இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானது ஆகும்.

அதுமட்டுமல்லாமல்  சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம் வாழ் தமிழர்களின் நலனிற்கும் இது எதிரானது ஆகும். இதனை கருத்தில் கொண்டுதான், திமுக அரசு ஆட்சி அமைந்த உடனேயே, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக ஒரு தீர்மானத்தை திமுக அரசு முன்மொழிந்தது. இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அந்த தீர்மானத்தை திமுக அரசு அனுப்பி வைத்தது. தமிழ்நாட்டில் உள்ள (TN Will Not Implement CAA) திமுக அரசைப் போலவே, பல்வேறு கட்சிகளும் மற்றும் மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

மக்களை திசை திருப்பும் முயற்சி :

“இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்த சட்டம் இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்கின்றது. தமிழ்நாடு அரசு ஆனது பேதங்களைத் தோற்றுவிக்க ஒரு போதும் இடமளிக்காது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியுள்ளது. இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற மற்றும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்று ஆகும். இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு ஆனது ஒரு போதும் இடம் கொடுக்காது. எனவே, பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு ஆனது எந்த வகையிலும் (TN Will Not Implement CAA) இடமளிக்காது என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் உறுதியாக தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Reply