TN Woman Donates ₹4 Crore Land : ₹4 கோடி நிலத்தை நன்கொடையாக அளித்த நங்கை
TN Woman Donates ₹4 Crore Land - ₹4 கோடி நிலத்தை நன்கொடையாக அளித்து பல கோடி மனதை வென்ற தமிழக பெண்:
தனது மகளின் நினைவாக அரசுப் பள்ளியின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக ₹4 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக பூரணம் ஆயி அம்மாள் அளித்துள்ளார். ஆயி அம்மாள் என்று அழைக்கப்படும் பூரணம் அம்மாள் மதுரை புதூரைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 52 ஆகும். இவர் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் இங்குள்ள அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஏக்கர் மற்றும் 52 சென்ட் நிலத்தை நன்கொடையாக (TN Woman Donates ₹4 Crore Land) வழங்கி உள்ளார். ஆனால் அந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஆனது ₹7 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனது மகளின் நினைவாக ₹4 கோடி நிலத்தை நன்கொடையாக அளித்த நங்கை :
ஜனவரி 5 ஆம் தேதி மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகாவை (Madurai District Chief Education Officer Karthika) முறைப்படி சந்தித்து 1.52 ஏக்கர் நிலப் பதிவு ஆவணங்களை பூரணம் ஆயி அம்மாள் நன்கொடையாக (TN Woman Donates ₹4 Crore Land) அளித்துள்ளார். தான் கல்வி பயின்ற தனது கல்வி நிறுவனமான கொடிக்குளத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (Panchayat Union Middle School, Kodikulam) வளர்ச்சி மற்றும் அந்த அரசுப் பள்ளியின் விரிவாக்கத்திற்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
தனது மகளின் நினைவாக அரசுப் பள்ளியின் விரிவாக்கத்திற்காக ₹4 கோடி மதிப்பிலான நிலத்தை நன்கொடையாக அளித்த பூரணம் ஆயி அம்மாள் தனது மகளின் பெயரை பள்ளிக்கு வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். பி.காம் பட்டதாரியான தனது மகள் யு.ஜனனி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு எப்போதும் உதவிக்கரம் நீட்டி, கல்வி மூலம் அவர்களை உயர்த்த பாடுபட்டவர் என பூரணம் ஆயி அம்மாள் அன்புடன் நினைவு கூர்ந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து போன தன் மகள் யு.ஜனனியின் பெயரை பள்ளிக்கு சூட்ட வேண்டும் என்பது தான் பூரணம் ஆயி அம்மாளின் ஒரே கோரிக்கை ஆகும்.
தாழ்த்தப்பட்ட குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தனது மகள் யு.ஜனனியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பூரணம் ஆயி அம்மாள் இந்த நன்கொடை (TN Woman Donates ₹4 Crore Land) அளித்துள்ளார். ஜனனி குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்த பூரணம் ஆயி அம்மாள் சிறுவயதிலிருந்தே கஷ்டங்களுக்கு ஆளானவர். கணவனை இழந்த பூரணம் ஆயி அம்மாள் கருணை அடிப்படையில் கணவரின் வேலையைப் பெற்றவர். அவர் தனது மகளை வளர்க்க பெரும் போராட்டங்களைச் சந்தித்தவர். பூரணம் தனது மறைந்த தந்தையிடமிருந்து பெற்ற மூதாதையர் சொத்தான நிலத்தை கிராமப்புற குழந்தைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக முழு மனதுடன் தானம் செய்துள்ளார்.
பூரணம் ஆயி அம்மாளின் செயலை பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி உள்ளனர் :
கொடிக்குளம் ஒத்தக்கடை அருகே உள்ள அரசுப் பள்ளிக்கு மேல்நிலைப் பள்ளியாக மாற்ற நிலம் தேவைப்படுவதைக் கண்டு, நிலப் பதிவாளரிடம் சென்று நிலத்தை பள்ளியின் பெயரில் பதிவு செய்த பூரணம் ஆயி அம்மாள் நிலத்தின் ஆவணங்களை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார். மக்கள் சமூக ஊடக யுகத்தில் தங்களது தாராள மனப்பான்மையின் சிறிய செயல்களைக் கூட விளம்பரப்படுத்தும் இந்த காலத்தில் பூரணம் ஆயி அம்மாள் தனது நிலத்தை பள்ளிக்கு பரிசாகப் பதிவு செய்ததை விளம்பரப்படுத்தாமல் முதன்மைக் கல்வி அதிகாரி கே.கார்த்திகாவிடம் ஆவணங்களை ஒப்படைத்த பிறகு தனது பணிக்கு திரும்பியுள்ளார். முதன்மைக் கல்வி அதிகாரி கே.கார்த்திகா மூலம் பூரணத்தின் கருணைச் செயல் ஆனது முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை MP எஸ்.வெங்கடேசன் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு சென்று வெளிச்சத்துக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை எம்.பி எஸ்.வெங்கடேசன் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களும் அவரைப் பாராட்டி உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரணத்தின் இந்த செயலை பாராட்டி குடியரசு தினத்தன்று சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படும் என அறிவித்துள்ளார். குடியரசு தின விழாவில் முதல்வரின் சிறப்பு பதக்கம் அவருக்கு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஜனவரி 29-ம் தேதி மதுரையில் நடைபெறும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் அவரை கவுரவிக்க உள்ளளோம்” என தெரிவித்தார். தகவலறிந்த மதுரை எம்பி சு.வெங்கடேசன், ஜனவரி 11ம் தேதி கொடிக்குளம் சென்று அவரை சந்தித்து, “பலர் எடுக்க மட்டுமே விரும்புபவர்கள். ஆனால் சிலர் மட்டுமே கொடுக்க விரும்புபவர்கள். கொடுக்க விரும்பும் அத்தகைய நபரைக் கொண்டாடுவது நம் கடமை” என்று கூறினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் X இல், “கல்வி என்பது உண்மையான, அழியாத செல்வம். மதுரை கொடிக்குளத்தை சேர்ந்த பூரணம் என்கிற ஆயி அம்மாள் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட தனது ஒரு ஏக்கர் 52 சென்ட் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் இந்த கொடையால் பயன்பெறுவார்கள். கல்வி கற்பித்தலையே உயர்ந்த தர்மமாக போற்றும் தமிழ் சமுதாயத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளுக்கு வரவிருக்கும் குடியரசு தினம் அன்று அரசு சார்பில் முதல்வர் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படும்” என்று X இல் பதிவிட்டுள்ளார். பூரணம் ஆயி அம்மாள், “சமுதாயத்தை மாற்றுவதற்கான ஒரே கருவி கல்வி என்று நான் நம்புகிறேன். கிராமப்புற குழந்தைகளின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக எனது மூதாதையர் சொத்தை முழு மனதுடன் தானம் செய்தேன்” என்று கூறியுள்ளார்.
Latest Slideshows
- விவோ நிறுவனம் இன்று புதிய Vivo X200 Pro ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது
- Tamilnadu Alert App - தமிழக அரசின் Mobile App அறிமுகம்
- Bank Of Maharashtra Recruitment : மகாராஷ்டிரா வங்கியில் 600 காலிப்பணியிடங்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- Nobel Prize For Literature 2024 : எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது
- IND Vs NZ Test Series : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக அறிவிப்பு
- Interesting Facts About Bison : காட்டெருமை பற்றிய சுவாரசியமான தகவல்கள்
- 5 Types Of Land In India : இந்தியாவில் காணப்படும் நிலங்களின் வகைகள்
- Vettaiyan Box Office Day 1 : வேட்டையன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்
- Vettaiyan Review : வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம்
- Vitamin C Foods In Tamil : வைட்டமின் சி நிறைந்த சத்தான உணவுகள்