TNPL 2024 : திருச்சியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது திருப்பூர் தமிழன்ஸ் அணி

தமிழகத்தை சேர்ந்த பல திறமையான கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகம் செய்து வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் Tamil Nadu Premier League (TNPL 2024)-ன் 8வது சீசன் கடந்த ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த TNPL 8வது சீசன் சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் தமிழகத்தின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 8 அணிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் Tamil Nadu Premier League (TNPL) கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நத்தத்தில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. TNPL பிரீமியர் லீக் நடந்து வரும் நிலையில் “Namma Family Group” நிறுவனம் ‘ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்’ அணிக்கு Sponsor (TNPL Tiruppur Tamizhans Team Sponsor) செய்து வருகிறது.

திருச்சி கிராண்ட் சோழாஸ் பௌலிங் தேர்வு :

இந்த பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மான் பாஃப்னா தனது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

திருச்சி அணிக்கு 170 ரன்கள் இலக்கு :

இதைத்தொடர்ந்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி களம் புகுந்தது. திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வசீம் அகமது மற்றும் ராஜ்குமார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வசீம் அகமது 10 ரன், ராஜ்குமார் 8 ரன், அடுத்து வந்த ஷியாம் சுந்தர் 1 ரன் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதைத்தொடர்ந்து  களம் இறங்கிய நிர்மல் குமார் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்த  வண்ணம் இருந்தன. கடைசியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 16.5 ஓவர்களில் 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

TNPL 2024 - திருப்பூர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி :

47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நடராஜன், அஜித் ராம் அசத்தல் :

திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் நடராஜன் மற்றும் அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து திருப்பூர் அணி வெற்றிபெற உறுதுணையாய் இருந்தனர்.

Latest Slideshows

Leave a Reply