TNPL Final 2025 : தமிழ்நாடு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது

நேற்று நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதி போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக (TNPL Final 2025) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. வெற்றி பெற்ற “திருப்பூர் தமிழன்ஸ்” அணிக்கு “நம்ம பேமிலி குரூப்” (Namma Family Group) நிறுவனம் Sponsor (TNPL Tiruppur Tamizhans Team Sponsor) செய்து வருகிறது. 

2025-ம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது திண்டுக்கல்லில் உள்ள என்பிஆர் கல்லூரி (NPR Collage) மைதானத்தில் நேற்று ஜூலை 6-ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்புச் சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திர அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

திருப்பூர் தமிழன்ஸ் அதிரடி பேட்டிங்

இதைத் தொடர்ந்து திருப்பூர் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் மற்றும் துஷார் ரஹேஜா ஜோடி ஆரம்பம் முதலே திண்டுக்கல் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். 11 ஓவர்கள் வரை அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து திருப்பூர் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

அமித் மற்றும் ரஹேஜா அரைசதம் (TNPL Final 2025)

மேலும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய அமித் சாத்விக் 34 பந்தில் 65 ரன்னில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சாய் கிஷோர் 1 ரன்னில் வெளியேறினாலும், மறுபுறம் துஷார் ரஹேஜா 46 பந்தில் 77 ரன்கள் குவித்து பெவிலியன் (TNPL Final 2025) திரும்பினார். மேலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய முகமது அலி 23 ரன்னிலும்,  சசிதேவ் 20 ரன்னிலும், அனோவன்கர் 25 ரன்னிலும் வெளியேற 20 ஓவரில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது.

TNPL Final 2025 - Platform Tamil

திண்டுக்கல் அணிக்கு 221 ரன்கள் இலக்கு

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னிலும், பாபா இந்திரஜித் 9, விமல் குமார் 10, தினேஷ் 3 ரன்களில் அவுட்டாகி வெறும் 39 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திண்டுக்கல் அணி (TNPL Final 2025) தடுமாறியது. அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹன்னி சைனி 17, அதுல் விட்கர் 24 ரன்கள் எடுக்க 14.4 ஓவரில் வெறும் 102 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வியடைந்தது.

திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி

இந்நிலையில் 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி கடந்த 2016-ம் ஆண்டு முதல் சந்தித்து வந்த தோல்விக்கு கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் அணி முற்றுப்புள்ளி வைத்து முதல் முறையாக தமிழ்நாடு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply