TNPL Tiruppur Tamizhans Team Sponsor : திருப்பூர் தமிழன்ஸ் Sponsored By நம்ம பேமிலி குரூப்

TNPL பிரீமியர் லீக் நடந்து வரும் நிலையில் “Namma Family Group” நிறுவனம் ‘ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்’ அணிக்கு Sponsor (TNPL Tiruppur Tamizhans Team Sponsor) செய்து வருகிறது.

TNPL தமிழ்நாடு பிரீமியர் லீக் :

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல கிரிக்கெட் வீரர்களை இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகப்படுத்திய TNPL  தமிழ்நாடு பிரீமியர் லீக் 8 வது சீசன் கடந்த ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சேலம், கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது. TNPL கிரிக்கெட் போட்டியில் நடப்பு ஆண்டுக்கான ஒன்பது போட்டிகள் சேலத்தில் நடைபெற உள்ளது. லீக் போட்டிகள் சேலம் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரை சேலத்தில் நடைபெற்றது. TNPL கடந்த ஜூலை 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை கிரிக்கெட் மைதானத்தில் முடிவடைய உள்ளது. இந்தப் போட்டியில் தமிழகத்தின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 8 அணிகள் விளையாடி வருகிறது.

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சேலத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. சேலம் கிரிக்கெட் சங்க செயலாளர் பாபுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைச் செயலாளர் ஆர்.என்.பாபா செய்தியாளர்களிடம் பேசினார். அதில் பேசிய அவர், கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் TNPL பிரீமியர் லீக்கில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கிய போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி வரை 28 லீக் போட்டிகள், 4 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

பரிசு தொகை :

தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.1.7 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (TNPL) பெண்களுக்கான போட்டி ஓரிரு ஆண்டுகளில் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPL Tiruppur Tamizhans Team Sponsor :

சென்னை கூடுவாஞ்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது சாம்ராஜ்யத்தை தொடங்கி சென்னை மட்டுமில்லாமல் ஊட்டி, கொடைக்கானல், கேரளா, கர்நாடகா, ஏற்காடு மற்றும் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டி பறக்கிறது. “Namma Family Group” நிறுவனம் ரியல் எஸ்டேட் மட்டும் இல்லாமல் மேலும் பல தொழிலில் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. பள்ளியில் படிக்கும் பல மாணவ, மாணவிகளுக்கு படிப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு போன்ற உதவிகளை செய்து வருகிறது. மேலும் விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் ‘திருப்பூர் தமிழன்ஸ்’ அணிக்கு Sponsor (TNPL Tiruppur Tamizhans Team Sponsor) செய்து வருகிறது. இந்த அணி நன்றான முறையில் விளையாடி வெற்றிபெற ‘நம்ம பேமிலி குரூப்’ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply