TNPSC 2024 Exam Schedule : TNPSC 2024 ஆண்டு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிட்டுள்ளது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த துறைக்களுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு? அறிவிப்புகள் எப்போது வரும்? தேர்வு எப்போது நடக்கும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. அந்த வருடத்தில் டிசம்பர் மாதத்தில் வெளியிடும்.

இதில் Group 1 முதல் Group 8 வரையிலான தேர்வுகளும் மற்றும் இதர துறை சார்ந்த தேர்வுகளும் நடத்தப்படுகிறது. மேலும் தற்போது தமிழக அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பும்  டி.என்.பி.எஸ்.சி வழியாக நிரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை (TNPSC 2024 Exam Schedule) தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 19 வகையான தேர்வுகளுக்கான அட்டவணை (TNPSC 2024 Exam Schedule) வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC 2024 Exam Schedule :

  1. குரூப்-4 தேர்வுவானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.
  2. குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள 65 இடங்களுக்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு தேர்வு ஜூலை மாதம் நடைபெறுகிறது.
  3. குரூப்-2 மற்றும் 2ஏ நேர்முக மற்றும் நேர்முக அல்லாத தேர்வுகளில் 1,294 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறும்.
  4. சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் 2 உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு தேர்வுகள் மே மாதம் நடைபெறும்.
  5. தமிழ்நாடு சட்டமன்றம் பணிகளில் ஆங்கில நிருபர் பணியிடத்தில் 6 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு வெளியிடப்பட்டு மே மாதம் தேர்வுகள் நடைபெறும்.
  6. வனத்துறையில் வனகாப்பாளர் மற்றும் வனக்கண்காணிப்பாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1,264 இடங்களுக்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறுகிறது.
  7. ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சார்நிலைப்பணிகளில் 467 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் தேர்வு நடக்கிறது.
  8. ஒருங்கிணைந்த சட்ட சேவைகள் துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். ஜூலை மாதம் இதற்கான தேர்வுகள் நடைபெறும்.
  9. ஒருங்கிணைந்த அறிவியல் சேவைகள் தேர்வுகளில் 96 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது. தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும்.
  10. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப்பணிகளில் 23 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெறும்.
  11. ஒருங்கிணைந்த உடற்கல்வி சேவைகளில் 12 காலிப்பணியிடம் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு அக்டோபர் மாதம் தேர்வு நடைபெறும்.
  12. ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவி சார்நிலைப்பணிகளில் 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தேர்வு அக்டோபர் மாதம் நடைபெறும்.
  13. தொல்லியல்துறை அதிகாரி மற்றும் உதவி அதிகாரி பணியிடங்களில் 14 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பானது அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். அக்டோபர் மாதம் தேர்வு நடைபெறும்.
  14. தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும். தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும்.
  15. ஒருங்கிணைந்த கணக்குப்பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகிறது. தேர்வு நவம்பர் மாதம் நடக்கிறது.
  16. ஒருங்கிணைந்த நூலக பணிகள் தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும்.
  17. ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில் 47 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வானது 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான அட்டவணையில் (TNPSC 2024 Exam Schedule) குரூப்-4, தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கணக்குப்பணிகள், ஒருங்கிணைந்த நூலக பணிகள் ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

This Post Has 2 Comments

  1. Akshu

    I am really happy to read everthing at one place

Leave a Reply