TNPSC Exam Schedule : TNPSC-யின் வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும்

TNPSC Exam Schedule :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான அறிவிப்புகள் மற்றும் தேர்வு எப்போது நடக்கும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்களை ஆண்டு அட்டவணையாக டிஎன்பிஎஸ்சி ஓவ்வொரு வருடமும் (TNPSC Exam Schedule) வெளியிடும். இந்த வகையில் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 15,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அட்டவணை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் (TNPSC Exam Schedule) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறையில் காலியாக உள்ள அனைத்து வகையான பணியிடங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித் தேர்வை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அதன்படி குரூப் 4, குரூப் 2, மற்றும் குரூப் 1, பொறியியல் பணிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளின் செயலாளர்களிடம் இருந்து காலிப்பணியிடங்களின்  விவரங்கள் பெறப்பட்டு அதற்கேற்றபடி வருடாந்திர அட்டவணை வெளியிடப்பட்டு தேர்வுகள் (TNPSC Exam Schedule) நடத்தி பணியிடங்கள் நிரப்பப்படும்.

அந்தவகையில் 2023-2024 ஆம் ஆண்டில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை பட்டியலிட வேண்டும் என சமீபத்தில் நடந்த துறைசார்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் மனிதவள மேலாண்மைத்துறை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பிறகு மனிதவள மேலாண்மைத்துறை சார்பில் அனைத்து துறைசார்ந்த செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் அனைத்து அரசு துறை செயலாளர்களும் நேரடி ஆட்சேர்ப்பின் கீழ் உள்ள பதவிகளுக்கான காலிப்பணியிடங்களின் விவரங்கள் வருகிற 27 ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். மேலும் 2023-2024 ஆம் ஆண்டு வரையில் குரூப்-2, 2ஏ, மற்றும் குரூப்-4 ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர அட்டவணை வரும் டிசம்பர் 15 ஆம் தேதி (TNPSC Exam Schedule) வெளியாகிறது. டி.என்.பி.எஸ்.சி.,யின் 30 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-1 பதவிகளுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல்கள் இந்த அட்டவணையில் இடம்பெறாதது தேர்வர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Latest Slideshows

Leave a Reply